கூடலுார்,-- குமுளி மலைப்பாதையில் ஆபத்தான வளைவுகளில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்துவதால் விபத்து அபாயம் உள்ளது.குமுளி மலைப்பாதையில் பல ஆபத்தான வளைவுகள் உள்ளன. லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6. கி.மீ., தூர மலைப்பாதை தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். கேரளாவிலிருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தமிழகப் பகுதிக்கு வந்து திரும்புகின்றன. மலைப்பாதையில் உள்ள முக்கிய வளைவுகளிலும், லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாய்களுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்திலும் வாகனங்களை நிறுத்திவிட்டு இயற்கை அழகை ரசிக்கின்றனர். வளைவுகளில் வரும் வாகனங்கள் இப்பகுதியில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் ரோந்து சென்று மலைப் பாதையில் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்த தடை விதிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE