தேனி,- -தேனி புது பஸ் ஸ்டாண்டில் நடைபெறும் அறிவு சார் நுாலகம், வாரச்சந்தை விரிவாக்க கட்டுப்மானப் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார்.இவர் தேனி நகராட்சியிலும் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., சரவணக்குமார், பெரியகுளம் நகராட்சி பஸ் ஸ்டாண்டை அரசு போக்குவரத்து பணிமனையாகவும், பணிமனையை பஸ் ஸ்டாண்டாகவும் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். வேறு துறை என்பதால் பரிந்துரை அனுப்பி ஒப்புதல் பெறுகிறேன் என இயக்குனர் பதில் அளித்தார். நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, தேனி -பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு, கம்பம் ரோடு பகுதிகளில் தேங்கும் மணலை சுத்தம் செய்வதற்கான இயந்திரம் வழங்க கோரினார். ஆய்வின் போது மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன், தேனி கமிஷ்னர் வீரமுத்துக்குமார் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE