திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவில், சுவாமிகள், தீர்த்தகுளங்களில்புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டனர்.திருக்கழுக்குன்றத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை பொறுப்பில், திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் சித்திரை பெருவிழா, கடந்த 5ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடந்தது.கடந்த 7ம் தேதி, அறுபத்துமூன்று நாயன்மார்கள் உற்சவம், 11ம் தேதி, பஞ்சமூர்த்திகள்
திருத்தேர்களில் உலா என, முக்கிய உற்சவங்கள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிகள் நேற்று, தீர்த்தவாரி உற்சவம் கண்டனர்.சபாநாயகர் எனப்படும் நடராஜருக்கு, பக்தவத்சலேஸ்வரர் கோவில் ஆமை மண்டபத்தில், பகலில் அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது; தொடர்ந்து மாடவீதிகளில் வலம் வந்தார். கோவிலை அடைந்த சிவபெருமான், ரிஷப தீர்த்தத்தில் புனிதநீராடினார்.மாலையில் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், கோவிலில் புறப்பட்டு, சங்குதீர்த்த குளத்தை அடைந்தனர். குளத்தில் புனித நீராடி, வழிபாடு நடந்து, மாடவீதிகளில் உலா சென்றனர். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.இரவு, சுவாமி, ராவணேஸ்வர வாகனத்தில், மலைவலம் சென்று, சித்திரை பெருவிழா கொடி இறக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE