திருவள்ளூர் நகராட்சியில்ரூ.70 லட்சத்தில் மின் விளக்குகள்

Added : மே 15, 2022
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சியில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக நிர்வாகம், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலையில், மின் கம்பங்கள் மற்றும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.திருவள்ளூர் நகராட்சியில், எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் வரை சாலையோரம் மின் விளக்குகள் இல்லாததால், இரவு


திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சியில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக நிர்வாகம், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலையில், மின் கம்பங்கள் மற்றும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.திருவள்ளூர் நகராட்சியில், எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் வரை சாலையோரம் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில், சாலை இருளில் மூழ்கின.

இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர். இதையடுத்து, திருவள்ளூர் நகராட்சி கூட்டத்தில், விபத்துகளை தடுப்பதற்கு மின் கம்பங்கள் மற்றும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.இதையடுத்து, எம்.ஜி.ஆர். சிலை முதல், டோல்கேட் வரை, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 27 மின் கம்பங்கள் அமைத்து, எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகின்றன.அதே போல், திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தொகுதி நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலை நடுவில் சாலையின் இருபுறமும் மின் விளக்கு அமைக்கப்படுகிறது.நகராட்சி அலுவலகத்தில் இருந்து, மணவாள நகர் வரை மொத்தம், 107 மின் கம்பங்களில், 212 எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன என, நகராட்சி தலைவர் உதயமலர் தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X