மீஞ்சூர் : ரயிலில் ஏறும்போது, மூதாட்டி ஒருவர் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை சென்டரல் நோக்கி சென்ற புறநகர் ரயில் ஒன்று, மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை, 8:25 மணிக்கு நடைமேடைக்கு வந்தது.சில நிமிடங்களில் ரயில் புறப்படும்போது, மூதாட்டி ஒருவர் அதில் ஏற முயற்சித்தார். அப்போது தவறி விழுந்தார்.
நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் கைகள் சிக்கி கொண்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, மூதாட்டியை, சக பயணியர் மீட்டனர். மீட்கப்பட்ட மூதாட்டி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காயம் அடைந்த மூதாட்டி, மீஞ்சூர் அடுத்த, செப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த டில்லியம்மாள், 70, என்பது தெரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE