கொடைக்கானல்,-- கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் விழாவில் அத்தி வரதராஜ பெருமாள் ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது.
இக்கோயில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சங்கரலிங்கேஸ்வரர், கோமதி அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து நேற்று அண்ணா சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் ஆனந்தகிரி தெருக்களில் ஊர்வலமாக வந்து, டோபிகானல் ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. இதில் சுவாமி பச்சை பட்டு உடுத்தி கொட்டும் மழையில் ஆற்றில் இறங்கிய பின் கோயிலை சென்றடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொடைக்கானலில் முதன்முதலில் நடந்த இவ்விழாவில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகிகள், வேலப்பா பக்தசபை செய்திருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement