நிலக்கோட்டை,--நிலக்கோட்டை ஐயப்பன் கோயில் பகுதி ஆனந்த் மகன் அருண்குமார் 15. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் நகருக்குள் சென்று வீடு திரும்பியபோது தியேட்டர் அருகே இருசக்கர வாகனம் பிரேக் பிடிக்காமல் அருகில் உள்ள கிணற்றில் விழுந்தார். சிறிது நேரத்தில் பலியானார். நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர். இந்தக்கிணற்றில் இது மூன்றாவது சம்பவம் ஆகும். எனவே குடியிருப்புப் பகுதியில் பாதுகாப்பு இல்லாத கிணறை இனியாவது பேரூராட்சி மூட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE