மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்| Dinamalar

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

Added : மே 15, 2022 | |
திண்டுக்கல்,- மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கிரி வரவேற்றார். வனச்சரக அலுவலர் ராஜமாரியம்மன் , பசுமை தமிழ்நாடு திட்டத்தில் பள்ளி, கல்லுாரி வளாகம், பொதுமக்கள் சொந்த இடங்களில் மரக் கன்றுகளை இலவசமாக வழங்கி நட்டு தரப்படும்'', என்றார். வட்ட வழங்கல் துறை கண்காணிப்பாளர்

திண்டுக்கல்,- மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கிரி வரவேற்றார். வனச்சரக அலுவலர் ராஜமாரியம்மன் , பசுமை தமிழ்நாடு திட்டத்தில் பள்ளி, கல்லுாரி வளாகம், பொதுமக்கள் சொந்த இடங்களில் மரக் கன்றுகளை இலவசமாக வழங்கி நட்டு தரப்படும்'', என்றார். வட்ட வழங்கல் துறை கண்காணிப்பாளர் செல்லத்தாய், ஆன்லைனில்ரேஷன் கார்டுக்கு விண்ணப் பித்தால் புதிய கார்டு வழங்கப்படும்'',என்றார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு அமர்வு படி 10 மடங்காக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X