விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே சவுக்கை மெலார் ஏற்றிய டிராக்டர் மின் கம்பியில் உரசியதால் தீப் பிடித்து டிப்பர் மற்றும் கூரை கொட்டகை எரிந்து சேதமானது.பண்ருட்டியைச் சேர்ந்தவர் பரசுராமன், 55; டிரைவர். இவர் நேற்று விக்கிரவாண்டி அடுத்த ரெட்டிகுப்பத்திலிருந்து பண்ருட்டிக்கு டிராக்டரில் சவுக்கை மெலார் ஏற்றிச் சென்றார்.மதியம் 12:30 மணியளவில் ரெட்டிக்குப்பம் ரோட்டில் சென்றபோது, மின்கம்பியில் சவுக்கை மெலார் உரசியதில், தீ பிடித்தது. உடன், பரசுராமன் டிராக்டரில் இருந்து டிப்பரை தனியாக கழற்றினார். டிப்பரிலிருந்த மெலார் மளமளவென எரிந்தது.காற்றின் வேகத்தில் தீ பரவியதால் சாலையோரம் போடப்பட்டிருந்த விவசாய கூரை கொட்டகையும் எரிந்தது.விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் டிப்பர், கூரை கொட்டகை முற்றிலும் எரிந்து சேதமானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE