சிதம்பரம், : சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை பழங்குடியின மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் வட்டம், 33வது வார்டு, பாலமான்கீழக்கரை, அம்பேத்கர் நகரில் பழங்குடியின மக்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.கோர்ட் உத்தரவின் பேரில், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் கடந்த ஆண்டு நோட்டீஸ் வழங்கினர்.
அப்பகுதியில் வசிக்கும் சிலர், தாங்களே முன் வந்து வீடுகளை காலி செய்து சென்றனர்.இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் 4 முறை ஜே.சி.பி. இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்றும் இடம் தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில், வாய்க்கால் கரையோரம் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு மாற்று இடம் தர வலியுறுத்தி நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.வி.சி. மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சேகர், நகர செயலாளர் தமீம் அன்சாரி, நகர துணை தலைவர் முத்து, வி.சி., நிர்வாகிகள் நீதிவளவன், ராஜேஷ், சதித்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE