திருக்கோவிலுார்,-அரகண்டநல்லுார் அருகே தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.வீரபாண்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வீரபாண்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.வேட்டவலம் மெயின் ரோட்டில் நடந்த சோதனையில், ரியாஸ், 34; என்பவரது மளிகைக் கடையில் இருந்த மூட்டையில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடன், அவைகளை பறிமுதல் செய்தனர்.மேலும் கல்லந்தல் ஏரிக்கரை பகுதியில் நடத்திய சோதனையில் 200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. விசாரணையில் வீரபாண்டியைச் சேர்ந்த முருகன், 42; என்பவர் ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது.அரகண்டநல்லுார் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE