
ஊழல் புகார்களும் வெளிவர ஆரம்பித்துவிட்டன. அதோடு சட்டம் - ஒழுங்கு நிலையும் மோசமாக உள்ளது. 'குறிப்பாக, 'லாக் -அப்' சாவுகள் அதிகமாகி விட்டன' என சொல்லப்பட்டு உள்ளதாம்.இந்த அறிக்கையைப் படித்ததும், தமிழகத்தில் தங்கள் கட்சியினர் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து கொண்டாராம் கட்சியின் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி. உடனே அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டாராம்.

தமிழக மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றி ஸ்டாலினிடம் சொன்னாராம். நீங்கள் சொன்னவற்றை நிச்சயம் கவனிக்கிறேன் என, ஸ்டாலின் பதில் அளித்தாராம். மக்களுக்கு எதிரான நடவடிக்கை களை கடுமையாக விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., சீனியர் தலைவர்கள் தி.மு.க., அரசு விஷயத்தில் வாய் மூடி மவுனமாக இருக்கின்றனர்.
இப்படி இருந்தால் மக்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும் என்பதால், இந்த அறிக்கையை, தமிழக மார்க்சிஸ்ட் கம்யூ தலைவர்கள், மத்திய தலைமைக்கு அனுப்பி வைத்தனராம். ஆனால், யெச்சூரியோ ஒரு போன் போட்டு விவகாரத்தை மூடிவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE