உள்ளாட்சிகளில் பெண்ணடிமைத்தனம்அரசுக்கு பன்னீர்செல்வம் கண்டனம்

Added : மே 15, 2022
Advertisement
சென்னை : 'உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களின் கணவர் உறவினர்கள் அடியாட்கள் தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் நகராட்சி பெண் தலைவர்கள் மாநகராட்சி பெண் மேயர்கள் ஆகியோரின் பணியை அவர்களின் கணவர்கள் செய்கின்றனர்.மதுரை



சென்னை : 'உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களின் கணவர் உறவினர்கள் அடியாட்கள் தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:
தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் நகராட்சி பெண் தலைவர்கள் மாநகராட்சி பெண் மேயர்கள் ஆகியோரின் பணியை அவர்களின் கணவர்கள் செய்கின்றனர்.மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணியின் கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. மதுரை மாநகராட்சியில் முன் வரிசையில் இடம் அளிக்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இரு தினங்களுக்கு முன் பட்ஜெட் கூட்டத்திலும் முன் வரிசையில் இடம் அளிக்காததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியது. இது குறித்து மேயரிடம் புகார் அளிக்க அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சென்றனர்.அப்போது மேயரின் கணவர் மற்றும் அவரது ஆட்கள் செய்தியாளர்கள் உள்ளே நுழைவதை தடுக்க கதவை பூட்டியுள்ளனர். இதில் இரு செய்தியாளர்கள் காயமடைந்தனர்.

மேயரின் கணவர் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆதிக்கம் மாநகராட்சியில் ஒங்கி ஒலிக்கிறது.மக்கள் பிரச்னை உட்பட அலுவல் சார்ந்த தகவல்களை அவர்களை மீறி மேயரிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை. பெண்களுக்கு பதிலாக அவரது கணவர்களும் உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல்.

ஒரு புறம் பெண்ணுரிமை பேசிக் கொண்டு மறுபுறம் பெண்ணடிமையை ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் போலும்.பெண்களை பொம்மையாக வைத்து ஆண்கள் செயல்படுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல். இதை தி.மு.க. அரசு வேடிக்கை பார்ப்பதால் இதிலும் இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
முதல்வருக்கு உண்மையிலேயே மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை இருக்குமானால் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் அல்லது அடியாட்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X