திண்டிவனம் : பா.ம.க., அரசியல் பயிலரங்கம் நாளை 16ம் தேதி முதல் துவங்கி உள்ளது. அதற்கான பணிகள் சுறு சுறுப்பாக நடந்து வருகிறது.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீடு உள்ளது.இதன் அருகிலேயே அரசியல் பயிலரங்கம் இயங்கி வந்தது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பயிலரங்கம் இயங்கவில்லை.இந்நிலையில் தொடர்ச்சியாக வந்த தேர்தல்களில் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறாமல் சரிவை சந்தித்தது.
இதனால் கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்வமின்றி பணியாற்றுவது மாற்றுக் கட்சிக்கு செல்வது என பா.ம.க., விற்கும் தலைவலியை ஏற்படுத்தியது.இவற்றைத் தடுக்க புதிதாக இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிகளவில் சேர்க்க வேண்டும்.ஏற்கனவே உள்ளவர்கள் கட்சியை விட்டு வெளியேறாமல் தடுக்க அவர்களை தயார்படுத்தவும் பா.ம.க.,வின் அரசியல் பயிலரங்கம் மீண்டும் துவங்கப்பட உள்ளது.
இந்த பயிலரங்கில் கட்சியினருக்கு அரசியல், பொருளாதாரம், தேர்தல் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். அதையொட்டி, தைலாபுரத்தில் உள்ள அரசியல் பயிலரங்கு கூடத்தை 16ம் தேதி காலை கட்சியின் தலைவர் ஜி.கே.மணி திறந்து வைக்கிறார். கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கொடியேற்றி வைக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE