சுகாதாரமான கழிவறை; ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியின் கனவு

Added : மே 15, 2022
Advertisement
சாதாரணமாக கழிப்பறைகள் கடினமான 'பிளாஸ்டிக்' போன்றவைகளால் உற்பத்தி செய்யப்படுவதால் எளிதாக அதனை உபயோகத்துக்கு (அடித்து, உடைத்து) இல்லாமல் செய்து விடுகின்றனர். உபயோகித்து விட்டு பலர் தண்ணீர் ஊற்றாமல் செல்வதால் கழிப்பறை மிகவும் அசுத்தமாகி அடுத்தவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் போகிறது. பொது கழிப்பறைகளின் துாய்மை, சுகாதாரம் மற்றும் தரம் ஆகியவை இந்தியாவின்சாதாரணமாக கழிப்பறைகள் கடினமான 'பிளாஸ்டிக்' போன்றவைகளால் உற்பத்தி செய்யப்படுவதால் எளிதாக அதனை உபயோகத்துக்கு (அடித்து, உடைத்து) இல்லாமல் செய்து விடுகின்றனர். உபயோகித்து விட்டு பலர் தண்ணீர் ஊற்றாமல் செல்வதால் கழிப்பறை மிகவும் அசுத்தமாகி அடுத்தவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் போகிறது.

பொது கழிப்பறைகளின் துாய்மை, சுகாதாரம் மற்றும் தரம் ஆகியவை இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை. இந்தியாவில் பொது கழிப்பறைகளுக்கு போதுமான உள்கட்டமைப்பு உள்ளது. அதாவது, ஆறு லட்சத்துக்கும் அதிகமான பொது கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை அழுக்காகவும், பராமரிப்பு மற்றும் துப்புரவு மேலாண்மை சரியானபடி இல்லாததால் பூட்டி வைக்கப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளதாக உள்ளன.

பொதுக் கழிப்பறைகளின் செயல்பாட்டுக்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதில்லை. இது பெரிய குறைபாடு.இவற்றை ஆராய்ந்த 'லுாடெல்' (Lootel) என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி IOT (Internet of Things) அடிப்படையிலான ஸ்மார்ட் ரெஸ்ட்ரூம் (கழிவறை, குளியல் அறை) என்ற புதிய முயற்சி எடுத்துள்ளது. இது பொது கழிப்பறைகளுக்கான முழுமையான சுய-நிலையான தீர்வு. 'லுாடெல்' ஸ்மார்ட் ரெஸ்ட்ரூம் மிகவும் புதுமையான செயல்முறையை புகுத்தியுள்ளது.

உதாரணமாக ஒரு சுத்தமான கழிப்பறைக்கு செல்ல, 10 ரூபாய் கட்டணம் என்றால், அந்த பணத்தை திரும்ப் பெற்றுக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.அதாவது, கழிவறை உபயோகங்களுக்கு உபயோகிப்பாளர் பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தப்படும் கட்டணத்தை அவர்களுடைய லுாடெல் கபேவில் உணவு மற்றும் பானங்களின் பில்களில் உபயோகிப்பாளர் பயனர் தனது ஓய்வறை கூப்பனுக்கான பணத்தை கழித்து கொல்லலாம்.

பணம் செலுத்துதல், பயன்படுத்துதல் மற்றும் மீட்பது என்பது 'லுாடெல்' மாடல். இது கழிப்பறையை வருவாய் மையமாக மாற்றுகிறது மற்றும் பலருக்கு வேலைகளை உருவாக்கும் கழிப்பறைகளை உருவாக்குகிறது. 'சிசிடிவி' மற்றும் முழுமையாக குளிர்சாதன வசதியுடனும் இருக்கிறது. யுனிசெக்ஸ் கழிவறைகளை உள்ளடக்கியது, அங்கு கழிவறைகளில் ஒன்று மாற்றுத்திறனாளிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இந்த திட்டத்தை பலர் உபயோகிக்க விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ, 2 லட்சம் பேர், 'லுாடெல்' மாடல் கழிப்பறையை பயன்படுத்தி உள்ளன. இந்த வகை கழிவறை/குளியல் அறைகளை, கிளையாகவும் எடுத்து நடத்தலாம். தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் 'லுாடெல்' மாடல் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
இணையதளம் www.lootel.com. தொடர்பு கொள்ள: 80859 52159, 72472 47247. இ-மெயில்: info@lootel.comவிவரங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, மொபைல் 98204--51259, இணையதளம் www.startup andbusinessnews.com.

- சேதுராமன் சாத்தப்பன் -
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X