ஜூன் 10ம்தேதி நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கவுள்ள இரண்டு இடங்களுக்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறுவதற்கு அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி உருவாகி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 57 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது. இதில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ம்தேதி நடைபெறவுள்ளது.
அ.தி.மு.க., சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஷ்குமார் ஆகிய 6 பேர் பதவி காலியாகிறது. தற்போது நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு 4 எம்.பி.,க்களும், அ.தி.மு.க., வுக்கு 2 எம்.பி.,க்களும் இடம் பெற உள்ளனர்.அ.தி.மு.க., சார்பில் கிடைக்கவுள்ள இரண்டு பதவிகளுக்கு, அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
இரண்டு எம்.பி.,க்களின் இடங்களை தலா ஒருவருக்கு என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரின் வீட்டிற்கு அவர்களின் ஆதரவாளர்கள் சீட்டு கேட்டு படையெடுக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பொன்னையன், சி.வி.சண்முகம், கோகுலஇந்திரா மற்றும் அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகரன், மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் அபரூபா சுனந்தனி, நடிகை விந்தியா போன்றவர்கள் எம்.பி., பதவி கேட்டு வருகின்றனர்.
தற்போது வன்னியர், யாதவர், கிறிஸ்துவர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை நிலவுகிறது. எனவே, வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் சி.வி.சண்முகம், ஜே.சி.டி., பிரபாகரன்; யாதவர் சமுதாயத்தினர் மத்தியில் கோகுல இந்திரா, டாக்டர் அபரூபா சுனந்தனி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கிறிஸ்துவர், யாதவர் என்ற இரண்டு தகுதி அடிப்படையில் டாக்டர் அபரூபா சுனந்தனிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இவர் அரசியலுக்கு வரும் முன் அரசு டாக்டராக பணியாற்றினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசியலுக்கு அழைக்கப்பட்டதால், அரசு டாக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வருவதால் அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என, கட்சியின் இரட்டை தலைமையிடம் மருத்துவ அணி நிர்வாகிகள் தரப்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நடிகை விந்தியாவும், சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அவருக்கு எந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement