சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அவருக்கு அவரே ஆறுதல்!

Added : மே 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அவருக்கு அவரே ஆறுதல்!'பதவியில் அமர்ந்து ஒன்பது மாதங்கள் தான் ஆகின்றன; அதற்குள் குழி பறிக்கின்றனரே...' என்று பதறுகிறார், கர்நாடக முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை.கர்நாடக மக்களிடையே செல்வாக்கு பெற்றவரான எடியூரப்பா, இதற்கு முன் முதல்வராக இருந்தார். வயது, 70க்கு மேலாகி விட்டதாலும், சில ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவும், அவரை பதவியிலிருந்து துாக்கி


 அக்கம் பக்கம்


அவருக்கு அவரே ஆறுதல்!



'பதவியில் அமர்ந்து ஒன்பது மாதங்கள் தான் ஆகின்றன; அதற்குள் குழி பறிக்கின்றனரே...' என்று பதறுகிறார், கர்நாடக முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை.கர்நாடக மக்களிடையே செல்வாக்கு பெற்றவரான எடியூரப்பா, இதற்கு முன் முதல்வராக இருந்தார். வயது, 70க்கு மேலாகி விட்டதாலும், சில ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவும், அவரை பதவியிலிருந்து துாக்கி அடித்தது, பா.ஜ., மேலிடம்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கினாலும், அதை சாமர்த்தியமாக சமாளித்து நாட்களை கடத்தி வருகிறார், பசவராஜ் பொம்மை.இந்த நேரத்தில் தான், கர்நாடகாவின் முதல்வரை மீண்டும் மாற்ற, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, சமீபத்தில் கர்நாடகாவுக்கு வந்து சென்றது, இந்த வதந்தியை மேலும்
அதிகரித்து விட்டது. 'அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பசவராஜ் பொம்மையை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலில் வெற்றி பெறுவது சிரமம். அதனால், வேறு ஒருவரை முதல்வராக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது...' என பா.ஜ.,வினரால் பேசப்படுகிறது.
பசவராஜ் பொம்மையோ, 'அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசிப்பதற்காகவே அமித் ஷா வந்தார். ஆனால், அதை வைத்து கதை கட்டி விட்டனர்...' என பொறுமுகிறார்.கர்நாடகாவில் உள்ள பொம்மையின் அதிருப்தியாளர்களோ, 'அவருக்கு அவரே ஆறுதல்
கூறுகிறார்; பாவம்...' என கிண்டலடிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
16-மே-202216:36:41 IST Report Abuse
sethusubramaniam ''கொடுத்தவன் பறித்துக்கொண்டாண்டி ''ன்னு பாடவேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X