சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 15, 2022 | |
Advertisement
தண்ணீர் குடிக்காத விலங்குவட அமெரிக்காவில் வறண்ட பாலைவனத்தில் கங்காரு எலிகள் உள்ளன. இவை கங்காருவை போல தன் பின்னங்கால்களினால் தாவி, தாவி ஓடுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. பல வகையான பருப்பு விதைகளே இதன் உணவுகள். விதைகளை உடனே சாப்பிடாமல், அதை தன் தாடையிலுள்ள பையில் வைத்து கொண்டு, தன் பொந்தில் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த விதைகள் நிலத்தின் ஈரத்தை கிரகித்து


தண்ணீர் குடிக்காத விலங்கு



வட அமெரிக்காவில் வறண்ட பாலைவனத்தில் கங்காரு எலிகள் உள்ளன. இவை கங்காருவை போல தன் பின்னங்கால்களினால் தாவி, தாவி ஓடுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. பல வகையான பருப்பு விதைகளே இதன் உணவுகள். விதைகளை உடனே சாப்பிடாமல், அதை தன் தாடையிலுள்ள பையில் வைத்து கொண்டு, தன் பொந்தில் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த விதைகள் நிலத்தின் ஈரத்தை கிரகித்து மெதுவாக பெருக்கிறது. அதன்பின் இவ்விதைகளை சாப்பிடும். இப்படி விதையிலுள்ள ஈரம்தான் இதற்கு நீராகிறதே தவிர இவை தண்ணீர் குடிப்பதே கிடையாது.


தகவல் சுரங்கம்



சர்வதேச ஒளி தினம்

அமெரிக்க இயற்பியலாளர் தியோடர் மைமான் 1960 மே 16ல் லேசர் ஒளிக்கற்றையை இயக்கிக்காட்டி சாதித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 16ல் உலக ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் அறிவியல், கலாசாரம், கலை, கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு, எரிசக்தி உட்பட பல்வேறு துறைகளில் லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. லேசர் (சீரொளி) என்பது ஒரே அதிர்வெண் கொண்ட, ஒரே வண்ணம் கொண்ட ஒளி. இது சாதாரண ஒளியைவிட பன்மடங்கு வலிமையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X