வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ-ஹிந்தி பேசத் தெரிந்தவர்கள் 'பானிபூரி'தான் விற்கின்றனர் என்ற தமிழக அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, உத்தர பிரதேச முன்னாள் துணை முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான தினேஷ் சர்மா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி தான் விற்கின்றனர் என, வடமாநில மக்களை கேலி செய்துள்ளார்.
இது, அவரது குறுகிய மனப்பான்மையையும், மொழி பற்றிய அறிவு அவருக்கு இல்லை என்பதையும் காட்டுகிறது. எந்த மொழிக்குமே எல்லை கிடையாது. ஒரு மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் மட்டுமே அதன் பயனையும் அறிந்து கொள்ள முடியும்.தாய்மொழி தவிர மேலும் பல மொழிகள் கற்றவரின் செயல்பாடுகள் அவரது முன்னேற்றத்துக்கு உதவும்.
ஹிந்தியை எதிர்ப்பது பொன்முடிக்கு அரசியல் ரீதியாக குறுகிய கால பலனை மட்டுமே தரும். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், ஒன்பது இந்திய மொழிகளும், ஏழு வெளிநாட்டு மொழிகளும் அறிந்தவர். தமிழக அமைச்சர் பொன்முடி ஹிந்தி படிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மொழியின் சிறப்பை அவர் உணர முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE