வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-நாட்டில் உள்ள, 12 பொதுத் துறை வங்கிகளில், 2021 - 2022 நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது, முந்தைய நிதியாண்டை விட, 51 சதவீதம் குறைவாகும்.நம் நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் நடந்துள்ள கடன் வாங்கி திருப்பி தராதது உள்ளிட்ட மோசடி சம்பவங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.இதற்கு அளித்துள்ள பதிலில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாவது:நாட்டில் உள்ள, 12 பொதுத் துறை வங்கிகளில், 2021 - 2022 நிதியாண்டில், 7,940 பண மோசடி சம்பவங்கள் நடந்து உள்ளன. அதில், 40 ஆயிரத்து, 295 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது, முந்தைய நிதியாண்டை விட, 51 சதவீதம் குறைவாகும்.இதில், அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 9,528 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 6,932 கோடி ரூபாயும்; பேங்க் ஆப் இந்தியாவில் 5,923 கோடி ரூபாயும்; பேங்க் ஆப் பரோடாவில் 3,989 கோடி ரூபாயும்; யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 3,939 கோடி ரூபாயும்; கனரா வங்கியில் 3,230 கோடி ரூபாயும் மோசடி நடந்துள்ளன.
இந்தியன் வங்கியில் 2,038 கோடி ரூபாயும்; இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1,733 கோடி ரூபாயும்; பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் 1,139 கோடி ரூபாயும்; சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 773 கோடி ரூபாயும்; யூகோ வங்கியில் 611 கோடி ரூபாயும்; பஞ்சாப் அண்டு சிந்த் வங்கியில் 455 கோடி ரூபாயும் மோசடி நடந்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE