விவசாயிகளாக மாறிய கைதிகள்: 200 கிலோ காய்கறி, பழங்கள் அறுவடை| Dinamalar

விவசாயிகளாக மாறிய கைதிகள்: 200 கிலோ காய்கறி, பழங்கள் அறுவடை

Added : மே 16, 2022 | |
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில், கைதிகள் இயற்கை விவசாயிகளாக மாறி, விளைவித்த 200 கிலோ பூக்கள், காய்கறிகள், பழங்கள் அறுவடை செய்யப்பட்டது.புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 220க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர்.நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு இருக்கும் கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும், சிறை
விவசாயிகளாக மாறிய கைதிகள்: 200 கிலோ காய்கறி, பழங்கள் அறுவடை



புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில், கைதிகள் இயற்கை விவசாயிகளாக மாறி, விளைவித்த 200 கிலோ பூக்கள், காய்கறிகள், பழங்கள் அறுவடை செய்யப்பட்டது.புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 220க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர்.நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு இருக்கும் கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும், சிறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சிறை வளாகத்தில் உள்ள 2.5 ஏக்கர் நிலம் கைதிகள் மூலம் சீரமைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றப்பட்டு உள்ளது.இப்பண்ணையில் ஆடு, மாடு, முயல்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தப் பட்டு, பாரம்பரிய முறையில் கத்திரி, எலுமிச்சை, கீரைகள், முள்ளங்கி, சாமந்தி, மஞ்சள், பப்பாளி, வாழை, மா, பலா, என 69 வகையான பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.சாகுபடிக்கு, ரசாயன உரங்கள் எதையும் பயன்படுத்தாமல், மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டரை மாதத்திற்கு முன் பயிரிடப்பட்ட காய்கறி மற்றும் பூச் செடிகள் தற்போது அறுவடை பருவத்தை எட்டி உள்ளன.கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கியும், காய்கறிகள் செழிப்பாக விளைந்தும் உள்ளன. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும், விளைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள், அறுவடை செய்யப்பட்டு வருகிறது.நேற்று சாமந்தி - 40 கிலோ, கத்திரிக்காய் - 62 கிலோ, வெண்டைக்காய் - 29 கிலோ, பயிறு வகைகள் -11 கிலோ உள்பட, பூக்கள், காய்கறிகள், பழங்கள் என மொத்தம் 200 கிலோ அறுவடை செய்யப்பட்டது.இவற்றை சிறை ஐ.ஜி., ரவுதீப்சிங் சாகர், தலைமை கண்காணிப்பாளர் அசோகன், துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டு கைதிகளை பாராட்டினர்.காய்கறிகளை கைதிகளின் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். மீதம் உள்ளதை வெளிச்சந்தையில் விற்கப்பட உள்ளது.அடுத்து, கைதிகள் உழைப்பில் விளைந்துள்ள வாழை, மஞ்சள் அறுவடை செய்யப்பட உள்ளது.


கைதிகள் ஆர்வம்
சிறை வளாகத்தில் தற்போது 2.5 ஏக்கர் நிலத்தில் கைதிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தினசரி கூலியாக அவர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது.இயற்கை விவசாயிகளாக மாறியுள்ள கைதிகள், மேலும் 1.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய, சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். கைதிகளின் ஆர்வத்தை பார்த்த சிறை நிர்வாகம், கைதிகளுக்கு விதைகளை வாங்கி தந்து, கூடுதல் விவசாயத்திற்கு பச்சைக்கொடி காட்டி, ஊக்கப்படுத்தி உள்ளது.

விடுதலைக்கு ஏங்கும் கைதிகள்

தண்டனை கைதிகள் கூறும்போது, 'எங்களுக்கான தண்டனை காலம் முடிந்தும் விடுதலை கிடைக்காமல் சிறையில் இருக்கிறோம். இரண்டு மாதமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். விவசாயம் செய்துவிட்டு படுத்தால் நிம்மதியான துாக்கம் வருகிறது.தமிழகம் மற்றும் வடமாநில சிறைகளில் தண்டனை முடிந்த கைதிகளை விடுதலை செய்கிறார்கள். அதேபோல எங்களையும் விடுதலை செய்ய வேண்டும். எஞ்சிய காலத்தில் விவசாயம் செய்து வாழ விரும்புகிறோம்' என தெரிவித்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X