நிலத்தடி நீர் மட்டம் 9 மாவட்டத்தில் சரிவு

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அதிக நுகர்வு காரணமாக, ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.நீர்வளத்துறையின் கீழ் இயங்கும் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் வாயிலாக, பல்வேறு இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒவ்வொரு மாத துவக்கத்திலும், முந்தைய மாதத்திற்கான, நிலத்தடி நீர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அரசிற்கு அனுப்பி
நிலத்தடி நீர் மட்டம், சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அதிக நுகர்வு காரணமாக, ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

நீர்வளத்துறையின் கீழ் இயங்கும் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் வாயிலாக, பல்வேறு இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒவ்வொரு மாத துவக்கத்திலும், முந்தைய மாதத்திற்கான, நிலத்தடி நீர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அரசிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


latest tamil news


அந்த வகையில், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நடத்திய ஆய்வில், ஏப்ரலில் நிலத்தடி நீர் கையிருப்பு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேநேரம், 2020ம் ஆண்டை விட மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர் கையிருப்பு அதிகரித்து உள்ளது.

தற்போது, பல மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.கோடைக்கால குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்வதிலும் சிக்கல் தீர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
16-மே-202209:12:02 IST Report Abuse
Nagar எல்லோரும் போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சேக்கொண்டே இருந்தால் நிலத்தடி நீர் குறையாமல் என்ன செய்யும்? ஒவ்வொரு நூறு மீட்டருக்கு ஒரு நூறு அடி ஆழ கிணறு தோண்டினால் மழை தண்ணீர் நன்கு சேகரிக்க முடியும். அரசு கிணறு வெட்டுவது அதிக கவனம் செலுத்தவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X