ஊத்துக்கோட்டை, : கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு வினாடிக்கு, 606 கன அடியாக அதிகரித்து உள்ளது.கண்டலேறு அணையின் நீர்மட்டம், 42.68 டி.எம்.சி., இருந்த நிலையில், தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நீர் கடந்த, 5ம் தேதி திறக்கப்பட்டது. வினாடிக்கு, 500 கன அடியாக திறக்கப்பட்டு பின், 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அங்கிருந்து, 152 கி.மீட்டர் சாய்கங்கை கால்வாயில் பயணித்து, 8ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 'ஜீரோ பாயின்டை' அடைந்தது. பின், அங்கிருந்து, 25 கி.மீட்டர் துாரமுள்ள பூண்டி நீர்த்தேக்கத்தை அன்று இரவு அடைந்தது.துவக்கத்தில் வினாடிக்கு, 280 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்து கிருஷ்ணா நீர், பின், படிப்படியாக அதிகரித்து, தற்போது, 606 கன அடி வீதம் அதிகரித்து உள்ளது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போதைய நீர்மட்டம், 27.66 அடி. கொள்ளளவு, 1.25 டி.எம்.சி., அங்குள்ள இணைப்புக் கால்வாய் மூலம் வினாடிக்கு, 600 கன அடி வீதம் திறக்கப்பட்டு, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தலா, 300 கன அடி நீர் திறக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE