கடவுள், தமிழை வைத்து தமிழகத்தில் அரசியல்: அன்புமணி பேச்சு

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
சேலம் : ''தமிழகத்தில் கடவுளை வைத்தும், தமிழை வைத்தும் அரசியல் செய்கின்றனர்,'' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேசினார்.சேலம் மாவட்டம், ஓமலுாரில், பா.ம.க.,வின், மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மணி தலைமை வகித்தார். அதில், இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், நம் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அடுத்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சேலம் : ''தமிழகத்தில் கடவுளை வைத்தும், தமிழை வைத்தும் அரசியல் செய்கின்றனர்,'' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேசினார்.



latest tamil news



சேலம் மாவட்டம், ஓமலுாரில், பா.ம.க.,வின், மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மணி தலைமை வகித்தார். அதில், இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், நம் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அடுத்த தேர்தலில், 11 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும். இங்கு, 55 ஆண்டாக, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிக்கு வருகிறது.

தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குறைந்தது, மூன்று மாதம் உழைத்து, நிதி நிலை அறிக்கையை உருவாக்குவர். பா.ம.க., 20 ஆண்டாக, மாதிரி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நிஜ நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வோம்.

தமிழகத்தில் கடவுளை வைத்தும், தமிழை வைத்தும் அரசியல் செய்கின்றனர். பா.ம.க., மட்டுமே, வளர்ச்சியை முன் வைத்து அரசியல் செய்கிறது. நமக்கு வேண்டியது, 20 சதவீதம். ஆனால், 10.5 சதவீதம் தான் கிடைத்தது. அதையும் தடுத்து விட்டார்கள். இதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி விளக்கியுள்ளோம்.

வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் நிச்சயம் கிடைக்கும். மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை, நமக்கான ஓட்டுகளாக மாற்ற வேண்டும். சமூக நீதி தான், பா.ம.க., நோக்கம். அந்த அடிப்படையில் தான் இயங்குகிறோம். இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கார்த்தி, கண்ணையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


latest tamil news


அடுத்த தலைமுைறையை காக்க வேண்டும்

ஓமலுாரில் பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும், இந்தியாவில் மட்டுமே உயர்த்தி வருகின்றனர். இதனால், எல்லா பொருட்களும் விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநில அரசு தன் பங்குக்கு, சொத்து வரியை உயர்த்தி வருகிறது.

தமிழகத்துக்கு, 10 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை. மதுவால் கிடைக்கும், 65 ஆயிரம் கோடி ரூபாயை கொண்டு தான் அரசு செயல்படுகிறது. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டுமானால், மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. பீஹார் போன்ற வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வேலை செய்கின்றனர்.

சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, தனியாருக்கு விற்க முயற்சி நடக்கிறது. அப்படி தனியாருக்கு கொடுப்பதாக இருந்தால், அந்த நிலங்களை, விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-மே-202220:32:17 IST Report Abuse
Ramesh Sargam அன்று, பலவருடங்களுக்கு முன்பு 'வன்னியர்' என்கிற ஒரு சமூகத்தினரை வைத்து, ஒரு அரசியல் கட்சி துவங்கி, இன்றுவரை அரசியல் செய்கிறீரே உங்கள் அப்பாவும், நீங்களும், அது சரியா?
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
16-மே-202219:15:29 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman என்ன சார் செய்வது? சாதியை வைத்து அரசியல் செய்வதற்கு இது எவ்வளவோ பரவாயில்லையே..
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
16-மே-202219:11:00 IST Report Abuse
Tamilan ஜாதியை வைத்து மட்டுமே அரசியல் செய்து முன்னேறியதுதான் இவருடைய கட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X