9 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | |
Advertisement
சென்னை-வங்கக் கடலில் அந்தமான் பகுதிகளில், இன்று தென் மேற்கு பருவ மழை துவங்குவதாகவும், தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய மழைப் பருவமான தென் மேற்கு பருவ மழை, மே கடைசி வாரத்தில் அந்தமான் பகுதியிலும், ஜூன் முதல் வாரத்தில் கேரளாவிலும் துவங்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-வங்கக் கடலில் அந்தமான் பகுதிகளில், இன்று தென் மேற்கு பருவ மழை துவங்குவதாகவும், தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



latest tamil news




இந்தியாவின் முக்கிய மழைப் பருவமான தென் மேற்கு பருவ மழை, மே கடைசி வாரத்தில் அந்தமான் பகுதியிலும், ஜூன் முதல் வாரத்தில் கேரளாவிலும் துவங்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மழை துவங்குகிறது.'ரெட் அலெர்ட்'இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை, இன்று அந்தமானின் தெற்கு பகுதிகளில் துவங்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த மழை படிப்படியாக வலுப்பெற்று, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விரிவடைய வாய்ப்புள்ளது.இதற்கிடையே, வளிமண்டல சுழற்சியால், தமிழக கடற்பகுதிகள் மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில், நாளை மறுதினம், 19ம் தேதிகளில் கனமழை பெய்யும்.கேரளாவின் மாஹே பகுதிக்கு, நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலெர்ட்' விடப்பட்டுள்ளது.


வெப்ப சலனம்



தமிழக வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனாலும், வெப்ப சலனம் காரணமாகவும், தமிழகத்தில் பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


latest tamil news



சென்னையில் மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலுார், கரூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், நாளை மறுதினம் கன மழை பெய்யும். மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது; 30க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X