இன்று முதல் 21ம் தேதி வரை விசைத்தறிகள் இயங்காது! நூல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம்

Added : மே 16, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஆர்.கே.பேட்டை : நுால் மற்றும் சாய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, துணி உற்பத்தியாளர்கள் இன்று முதல், வரும் 21ம் தேதி வரை நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, நெசவாளர்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த அறிவிப்பை, ஆட்டோக்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் நெசவாளர்கள் விசைத்தறி நெசவு செய்து வருகின்றனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆர்.கே.பேட்டை : நுால் மற்றும் சாய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, துணி உற்பத்தியாளர்கள் இன்று முதல், வரும் 21ம் தேதி வரை நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, நெசவாளர்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த அறிவிப்பை, ஆட்டோக்களில் பிரசாரம் செய்து வருகின்றனர்.



latest tamil news


திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் நெசவாளர்கள் விசைத்தறி நெசவு செய்து வருகின்றனர். இதில், பொதட்டூர்பேட்டையை மையமாக கொண்டு நெசவு செய்து வரும் நெசவாளர்கள், உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டு, சமீபத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில் நடந்த பேச்சில், உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் இடையே சுமுக ஒப்பந்தம் எட்டப்பட்டு, போராட்டம் நிறைவு பெற்றது. இரு தரப்பினரும் இணைந்து நெசவு தொழில் நடந்து வந்தது.



தவிப்பு


இந்நிலையில், நுால் விலை உயர்வு மற்றும் சாயம் ஏற்றுவதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால், உற்பத்தியாளர்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.தொடர்ந்து சுமுகமாக தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் இன்று முதல், வரும் 21ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றனர்.

கூலி உயர்வுக்காக போராடிய நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக, தற்போது நெசவாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், அறிஞர் அண்ணா நெசவாளர் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று தறிக்கூடங்களுக்கு நேரில் சென்று ஆதரவு கோரினர். ஆட்டோக்களிலும் பிரசாரம் செய்தனர்.

அரசு கையில் முடிவு
திருத்தணி உட்கோட்டத்தில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சமீபத்தில் நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற ரீதியில், வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு சமரச தீர்வு எட்டப்பட்டது.தற்போது, நுால் மற்றும் சாய மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தத்தில் அதிகாரிகள் சமரசம் செய்ய இயலாது.


latest tamil news



மத்திய - மாநில அரசுகள் தான் தீர்வு காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.நுால் விலை உயர்வால், விசைத்தறி தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு தொழில் வாய்ப்பு அளிக்கும் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை உணர்ந்து, நெசவாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.

-என்.வி.கிருஷ்ணன், நெசவாளர்,பொதட்டூர்பேட்டை.நெசவாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உற்பத்தியாளர்கள் சமீபத்தில் கூலி உயர்வு அளித்தனர். தற்போது, நுால் விலை உயர்வால், உற்பத்தியாளர்கள் நெருக்கடியான நிலையில் உள்ளனர். அதை உணர்ந்து, உற்பத்தியாளர்களுடன் இணைந்து, அறிஞர் அண்ணா நெசவாளர் முன்னேற்ற சங்கத்தினரும், இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

-கலாம் விஜயன், தலைவர், அறிஞர் அண்ணா நெசவாளர் முன்னேற்ற சங்கம்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
16-மே-202208:01:04 IST Report Abuse
தியாகு பஞ்சு விலை ஏறுது. ஏன் ஏறுது? உற்பத்தி குறைவு. ஏன் உற்பத்தி குறைவு? பருத்தி விளைவிக்க ஒரு விவசாயியும் ஆர்வம் காட்டுவதியிலை. ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? கஷ்டப்பட்டு விளைவிக்கும் பருத்திக்கு விவசாயிக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. ஏன் கிடைப்பதில்லை? இடை தரகர்கள் அவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள். ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? மோடிஜி கொண்டு வந்த விவசாய சீர்திருத்த சட்டங்களை தேச விரோதிகள் எதிர்ப்பதால். ஏன் தேச விரோதிகள் எதிர்க்கிறார்கள்? இடை தரகர்களிடம் இருந்து கமிஷன் கிடைப்பதால். இவ்வளவுதான் விஷயம். விவசாயத்தில் ஏன் இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை என்று இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X