சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

Added : மே 16, 2022 | |
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் அருகே வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வில்லியனுார் அருகே உள்ள சிவராந்தகம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து மனைவி கோகிலம்(80). கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை கோகிலம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது சேலையில்


வில்லியனுார் : வில்லியனுார் அருகே வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வில்லியனுார் அருகே உள்ள சிவராந்தகம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து மனைவி கோகிலம்(80). கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை கோகிலம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது சேலையில் பற்றிய தீ, உடல் முழுவதும் பரவியது.மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அவரை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X