காமராஜர் ஆட்சி திராவிட மாடலா: ஆ.ராசா பேச்சு... காங்கிரசில் பெருமூச்சு!

Updated : மே 17, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (71) | |
Advertisement
கோவை: ''காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடல் தான்,'' என, கோவையில் தி.மு.க., பயிலரங்கில் எம்.பி., ராசா பேசினார். இது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் 'திராவிட மாடல் தான் தேசிய மாடல்' என்ற தலைப்பில் தி.மு.க., பயிலரங்கம் நேற்று (மே 15) நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். செந்தில் பாலாஜி
DMK, Dravidian Model, Kamaraj, ARaja, Senthil Balaji, திமுக, திராவிட மாடல், காமராஜர், ஆராசா, செந்தில் பாலாஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: ''காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடல் தான்,'' என, கோவையில் தி.மு.க., பயிலரங்கில் எம்.பி., ராசா பேசினார். இது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் 'திராவிட மாடல் தான் தேசிய மாடல்' என்ற தலைப்பில் தி.மு.க., பயிலரங்கம் நேற்று (மே 15) நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். செந்தில் பாலாஜி பேசுகையில், ''மனிதனை மனிதனாக நடத்துவது திராவிட மாடல். சில பேர் குஜராத் மாடல் என்கின்றனர். ஆனால் அங்கு மின்வெட்டு உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அதேநேரம் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கி வருவது திராவிட மாடல். பல்வேறு மாநில முதல்வர்களும் நம் முதல்வரின் ஆட்சியை பாராட்டி வருகின்றனர்,'' என்றார்.

தி.மு.க., துணை பொதுச்செயலாளர் எம்.பி., ராசா பேசியதாவது: தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது. பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம். ஈ.வெ.ரா.,வின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல; பெண்ணியம், சாதி ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் பங்கு ஆகியவையும் தான்.


latest tamil news


கடந்த, 1996ம் ஆண்டில் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கினார். இது திராவிட ஆட்சியில் நடந்தது. காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடல் தான். எதை கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் படிப்பார்கள் என்பதை அறிந்து பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, மேயர் கல்பனா, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், கிருஷ்ணன், ராமச்சந்திரன், சேனாதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


காங்கிரசார் கடுப்பு

காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று நீண்ட காலமாக காங்., பிரசாரம் செய்து ஓட்டு கேட்கிறது. இந்நிலையில் காமராஜர் ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஆ.ராசா பேசியது காங்கிரசார் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறிக்கொண்டு இருக்கின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
17-மே-202207:00:51 IST Report Abuse
Rajarajan காங்கிரெஸ்ஸை, தி.மு.க. கழுவி எவ்வளவுதான் கழுவி கழுவி ஊற்றினாலும், சிரிச்சிகிட்டே இருக்கறது தான் காங்கிரஸ். இல்லனா, விலாசம் இருக்காதே
Rate this:
Cancel
Balachandar - Chennai,இந்தியா
17-மே-202206:44:12 IST Report Abuse
Balachandar This Trichy Raja Corruption Star is teaching other politicians how to make crore in Corruption.
Rate this:
Cancel
17-மே-202206:28:01 IST Report Abuse
S.Balakrishnan குறை பிரசவ கழகத் திருமகனின் சேட்டைகள் வெளியே தூக்கி எரிந்த ....ஊலையிடுவதை விட கேவலமாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X