
சுமார் நுாறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்ததை என்பதை எடுத்துக்காட்டும் வகையிலான புகைப்படக் கண்காட்சி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடந்துவருகிறது.

புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டின் துணைத் துாதரகம், அலையன்ஸ் பிரான்சைஸ்டன் இணைந்து ‛ஒன்றினைதல்' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியினை நடத்திவருகின்றனர்.

நாட்டின் சுதந்திரத்திற்கு முன் பின் உள்ள இந்தியாவின் வளர்ச்சியை இங்குள்ள புகைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.இந்தியாவை இந்தியர்கள் படம் எடுத்ததை விட அதிகம் வெளிநாட்டினர்தான் ரசித்து ரசித்து எடுத்துள்ளனர்.எடுத்தவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல பணி நிமித்தமாகவும் அரசு அலுவல் நிமித்தமாகவும் இந்தியா வந்த பொறியாளர்கள்,மருத்துவர்கள்,பேராசிரியர்கள் ஆகியோர்தாம் இத்தகைய புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இவர்களில் பலர் புகைப்படங்கள் மீதான காதலால் தாங்கள் பார்த்துவந்த தொழிலையும் துறந்துள்ளனர்,இந்தியாவை விட்டு ஆறு மாதத்தில் சொந்த நாடு திரும்ப வேண்டியவர்கள் கூடுதலாக ஆறு ஆண்டுகள் புகைப்படம் எடுப்பதற்காகவே தங்கியுள்ளனர்.இந்த புகைப்படக்கலைஞர்களின் புகைப்படங்களை பார்த்து ரசித்த இந்தியாவை ஆண்ட மன்னர்களில் ஒருவரான மான்சிங்கும் புகைப்படக்கலைஞராக மாறி முப்பது ஆண்டுகள் புகைப்படம் எடுத்துள்ளார்.

படங்களை எடுத்த புகைப்படக்கலைஞர்கள் பற்றியும் அவர்கள் எடுத்த சூழ்நிலையையும் ஆங்கிலத்தில் மட்டுமின்றி அழகு தமிழிலும் எழுதிவைத்துள்ளது பாராட்ட வேண்டியதாகும்.1822 ல் எடுத்து முதல் புகைப்படம் முதல் பத்தாயிரம் தம்ப்நெயில் மூலம் இணைக்கப்பட்ட ஒரே புகைப்படம் வரையிலான அபூர்வ புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புகைப்பட ஆர்வலர்கள் மறக்காமல் பார்த்து ரசிக்க வேண்டிய இந்த புகைப்படக் கண்காட்சி வருகின்றன 19ந்தேதி வரை நடைபெற உள்ளது.அனுமதி இலவசம்.

-எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE