பவுர்ணமியில் வேட்பாளரை வெளியிட்ட பகுத்தறிவு திமுக: 'மாஜி' ஜெயக்குமார் கிண்டல்

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
சென்னை: பகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொற்காலம் - திமுக ஆட்சி கற்காலம். தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது. திமுக ஆட்சிக்கு
பகுத்தறிவு, பவுர்ணமி, வேட்பாளர் பட்டியல், திமுக, ராஜய்சபா, அதிமுக, ஜெயக்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொற்காலம் - திமுக ஆட்சி கற்காலம். தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசினர். நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுப்போது, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர். கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது ஒன்றை நிறைவேற்றியுள்ளதா?

மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். இந்த ஆட்சி நம்பிக்கை மோசடி செய்ததாக மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் இதெல்லாம் வெளிப்படும். பகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளது. ஓராண்டு திமுக ஆட்சியின் மதிப்பீடு ஆனது, நாங்கள் (அதிமுக) ஹீரோவாகவும், இவர்கள் (திமுக) ஜீரோவாகவும் இருக்கின்றனர்.


latest tamil news


அம்மா உணவகங்களை படிப்படியாக குறைத்து கருணாநிதி பெயரில் உணவகம் திறக்க முயற்சிக்கின்றனர். மகளிருக்கு இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என அனைத்தையும் முடித்துள்ளனர். இப்படியான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய நல்ல திட்டங்களை எல்லாம் முடித்துவைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
16-மே-202220:22:42 IST Report Abuse
John Miller nnnn
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
16-மே-202219:22:23 IST Report Abuse
Tamilan விஞ்சானத்தில், பஞ்சாங்கங்கள் சாஸ்த்திர சம்பிரதாயங்களும் ஒரு அங்கம் . விஞ்சானத்தில் உள்ள பகுத்தறிவுவாதிகளால் இதையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிடமுடியவில்லை . கற்கால தமிழர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டும் பகுத்தறிவு (பறைசாற்றிக்கொண்ட) தமிழர்கள் மட்டுமே இனியும் சாஸ்த்திர சம்பிரதாயங்கலை ஒதுக்கி வைக்கலாம் என்று கனவு மட்டுமே காண்கிறார்கள் .
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
16-மே-202216:25:00 IST Report Abuse
Duruvesan பாஸ்,விடியலம்மா கோயிலுக்கு போறது ஹிந்து அடிமைகள் ஓட்டு வாங்க மட்டுமே, ஆக அது உண்மை யில்லை என கர்த்தரின் சீடர் கடிதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X