வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேபாளம் சென்றார். அங்குள்ள மாயாதேவி கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். அவருடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் துபா உடன் சென்றார்.
முன்னதாக காத்மாண்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புத்தரின் பிறந்த இடமாகக் கருதப்படும், நேபாளத்தில் உள்ள லும்பினியில் உள்ள புத்த கலாசார மையத்திற்கு சென்று சிறப்பு பூஜை நடத்தினார். மேலும் அவர் பல்வேறு மரங்களை நட்டினார்.