தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்: கவர்னர் ஆசை

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
சென்னை: தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி விருப்பம் தெரிவித்துள்ளார்.சென்னை பல்கலையின் 164வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பட்டம் பெற்றவர்கள், குடும்பத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும். உலகின்
Madras University, Governor Ravi, Tamil, Spread, Tamilnadu, தமிழ், சென்னை பல்கலை, பட்டமளிப்பு விழா, கவர்னர் ரவி, தமிழ்நாடு, தமிழகம்

சென்னை: தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலையின் 164வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பட்டம் பெற்றவர்கள், குடும்பத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும். உலகின் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழின் புகழை தமிழகத்தை தாண்டி கொண்டு செல்ல வேண்டிய காலம் வந்துள்ளது. தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்.


latest tamil newsதமிழ், தமிழ் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுவது தேவையான ஒன்றுதான். ஏராளமான இலக்கியச் செல்வங்கள் தமிழ் மொழியில் உள்ளன. முதல்வர் சட்டசபையில் அறிவித்தப்படி தமிழர்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர். உலகின் பிற சமூகங்கள் இரும்பை பயன்படுத்துவதற்கு முன்னதாகவே நாம் இரும்பை பயன்படுத்தி உள்ளோம்.

முன்னோடிதமிழ்


மறக்கடிக்கப்பட்ட நமது தொன்மையான பொற்காலத்தை நினைவுகூற வேண்டியது நம் கடமை. கல்வி, தொழில், மருத்துவ துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை பல்கலையின் புகழை மீட்டெடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17-மே-202204:19:29 IST Report Abuse
Matt P தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வது நல்லது தான். அப்படியானால் தான் பிற்காலத்தில் தமிழ் நாடு முக்கால் பங்கு இங்கிலீஷும், கால் பகுதி தமிழும் பேசும்போது தமிழ் எங்கேயாவது வாழ்கிறதே என்று மகிழ்சியடைந்து கொள்ளலாம். ஒரு வாக்கியத்தில் 3 வார்த்தையாவது இங்கிலீஷு சேர்த்து பேசாவிட்டால், இவருக்கு ஏங்கிலீஷு தெரியாது போலிருக்கிறது என்று ஏளனமாக பார்க்கும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
16-மே-202220:43:43 IST Report Abuse
Dhurvesh தமிழக்கு புறவிடு தூது
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
16-மே-202220:31:57 IST Report Abuse
Godyes இது வரை எந்த கவர்னராவது தமிழ் பற்றி பேசி இருக்காங்களா. திராவிட போர்வையில் மங்களம் பாடும் தமிழ் அரசியல்வாதிகள் உணரணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X