உயரப்போகுது பேருந்து கட்டணம்: பட்டியல் தயார் என்கிறார் அமைச்சர்| Dinamalar

உயரப்போகுது பேருந்து கட்டணம்: பட்டியல் தயார் என்கிறார் அமைச்சர்

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (37) | |
பெரம்பலூர்: தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.பெரம்பலூர் அருகே புதிய வழித்திடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர்
Tamilnadu, Bus Fare, Ticket Rate, Minister, Sivasankar, தமிழகம், பஸ், பேருந்து, கட்டணம், உயர்வு, பட்டியல் தயார், அமைச்சர், சிவசங்கர்

பெரம்பலூர்: தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே புதிய வழித்திடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு விட்டது. ஆந்திரா, கேரளா அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயணப் பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதற்கேற்ப அதிகாரிகள் கட்டனத்தை நிர்ணயித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை.


latest tamil newsபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. போக்குவரத்து கழகம் 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனில் உள்ளது. மாநில உரிமைகளில் எந்தவித சமரசமும் இன்றி முதல்வர் செயல்படுகிறார். ஆதினங்கள் கேட்டுக்கொண்டதாலேயே பட்டனபிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருநங்கைகளால் பேருந்து பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிவசங்கர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X