அனைவருக்குமான ஒரே இந்தியா: ராகுல் விருப்பம்

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
ஜெய்ப்பூர்: பா.ஜ., இரு வேறு இந்தியாவை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‛நமக்கு இரு இந்தியா தேவையில்லை, ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பைப் பெறும் ஒரே இந்தியாதான் வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கரனா கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற
Congress, One India, Rahul, BJP, Divide, Connect, Rahul Gandhi, Ideology, Ideologies, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, ஒரே இந்தியா, இரு இந்தியா, பாஜக, பாஜ, நாடு, பிளவு, ஒருங்கிணைப்பு, சித்தாந்தங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜெய்ப்பூர்: பா.ஜ., இரு வேறு இந்தியாவை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‛நமக்கு இரு இந்தியா தேவையில்லை, ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பைப் பெறும் ஒரே இந்தியாதான் வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கரனா கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ராகுல் பேசியதாவது: காங்கிரசுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது மற்றும் ஆழமானது. உங்களின் வரலாற்றை பாதுகாக்கிறோம். அதனை அழிக்கவோ அல்லது அடக்கவோ நாங்கள் விரும்பவில்லை. எங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, ​​உங்கள் நிலம், காடு, தண்ணீரை பாதுகாக்க வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் கொண்டு வந்தோம்.

இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அனைவரையும் ஒன்றிணைக்க, அனைவருக்கும் மரியாதை அளிக்க, அனைவரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் சித்தாந்தங்களுடன் காங்கிரசும், மறுபுறம் பழங்குடியினரின் வரலாறு, கலாசாரத்தை பிளவுபடுத்தி அழிக்கும் சித்தாந்தங்களுடன் பா.ஜ.,வும் உள்ளன.


latest tamil news


நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம்; அவர்கள் பிளவுபடுத்துகிறார்கள். நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்; அவர்கள் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவுகிறார்கள். பொருளாதாரத்தின் மீது பா.ஜ., அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி.,யை பிரதமர் அமல்படுத்தியதால், பொருளாதாரம் அழிந்துள்ளன. பொருளாதாரத்தை வலுப்படுத்த காங்கிரஸ் அரசு வேலை செய்தது, ஆனால், மோடி அரசு அதை அழித்துள்ளது. தற்போது நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.


latest tamil news


பா.ஜ., இரு வேறு இந்தியாவை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் 2, 3 தொழிலதிபர்களுக்காக ஒரு இந்தியாவும், ஏழை, தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒரு இந்தியாவையும் உருவாக்க முயற்சிக்கிறார்கள். நமக்கு இரு இந்தியா தேவையில்லை, ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பைப் பெறும் ஒரே இந்தியாதான் எங்களுக்கு வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-மே-202221:27:47 IST Report Abuse
Ramesh Sargam அங்கு சேர்ந்துள்ள மக்கள் கூட்டம் "தானா சேர்ந்த கூட்டமா" அல்லது "காசு கொடுத்து அழைத்துவரப்பட்ட கூட்டமா"?
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
16-மே-202219:33:49 IST Report Abuse
ANANDAKANNAN K எதோ ஒன்னு ரெண்டு மாநிலத்தில் ஆட்சி, இப்போ இவர் பேசி விட்டார் அதும் காணாமல் போகும், பிரித்தாளும் கொள்கை அது காங்கிரஸ் கட்சிக்கு காய் வந்த செயல், எடுத்துக்காட்டு அவசரநிலை பிரகடனம், இங்கு எல்லோரும் மத்திய அரசை பிரிவினை சொல்லான ஒன்றியம் என்று சொல்கிறார்கள், ஆங்கிலத்தில் "யுனைடெட் " என்று சொன்னால்தான் நீங்கள் சொல்லும் அர்த்தம் வரும், யூனியன் என்ற சொல்லுக்கு அது அர்த்தம் ஆகாது, இந்திய என்பது ஒரு நாடு அதில் உள்ளவையே மாநிலங்கள், பல மாநிலங்கள் சேர்ந்தது இந்திய இல்லை, மத்திய அரசுக்கு நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கும் அல்லது இணைக்கலாம் எடுத்துக்காட்டு தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ,உத்தரகண்ட், ஒன்றியம் என்று சொல்லி நம் தாய் நாட்டை நமே இகழ்வது மடமை ஆகும். பாரத மாதா வாழ்க.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
16-மே-202219:09:14 IST Report Abuse
jayvee ஒரு ஹைக்கூ .. ராகுல் தலைமையில் காங்கிரஸ் மூடர்களின் மாநாடு.. இதற்கு பெயர் : சிந்தனையாளர் கூட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X