டில்லியில் 80% ஆக்கிரமிப்பு பகுதிகளையும் இடித்து விடுவீர்களா?: கொதிக்கும் கெஜ்ரி.,

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் கிட்டத்தட்ட 80 சதவீத பகுதிகள் ஆக்கிரமிப்பு தான் எனவும், அதனை பா.ஜ., அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சியினர் இடித்து விடுவார்களா என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.டில்லியில், மாநில ஆட்சியில் ஆம்ஆத்மி கட்சியும், உள்ளாட்சியில் பா.ஜ.,வும் இருந்து வருவதால், அடிக்கடி இந்த இரு கட்சிகளுக்கு இடையே மோதல்போக்கு நிலவுகிறது.
Delhi, Arvind Kejriwal, Encroached, Illegal, Destroy All, BJP, Anti Encroachment Drive, டில்லி, ஆக்கிரமிப்பு, இடிப்பு, முதல்வர், கெஜ்ரிவால், பாஜக, பாஜ, மாநகராட்சி, சட்டவிரோதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் கிட்டத்தட்ட 80 சதவீத பகுதிகள் ஆக்கிரமிப்பு தான் எனவும், அதனை பா.ஜ., அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சியினர் இடித்து விடுவார்களா என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டில்லியில், மாநில ஆட்சியில் ஆம்ஆத்மி கட்சியும், உள்ளாட்சியில் பா.ஜ.,வும் இருந்து வருவதால், அடிக்கடி இந்த இரு கட்சிகளுக்கு இடையே மோதல்போக்கு நிலவுகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற டில்லி மாநகராட்சி உத்தரவிட்டதுடன், பல பகுதிகளில் புல்டோசர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.


latest tamil news


இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது: டில்லி மாநிலமானது திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கப்படவில்லை. டில்லியில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்ட விரோதமானவை எனக் கூறலாம். அப்படியானால் 80 சதவீத பகுதிகளையும் பா.ஜ., அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சியினர் இடித்து விடுவார்களா? இது சுதந்திர இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய அழிவாக இருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை ஆம்ஆத்மியால் பொறுத்துக்கொள்ள முடியாது.

டில்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ., அதிகாரத்தில் இருந்தது. இந்த 15 ஆண்டுகாலத்தில் பா.ஜ., என்ன செய்தது? தேர்தல் நடக்கட்டும், புதிய மாநகராட்சி நிர்வாகம் ஒரு முடிவை எடுக்கட்டும். ஆக்கிரமிப்பு பிரச்னையை தீர்ப்போம் என்று டில்லிவாசிகளுக்கு உறுதி அளிக்கிறோம்; அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவோம். டில்லியில் சேரிகளை அகற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
17-மே-202204:01:01 IST Report Abuse
thamodaran chinnasamy கபடம் நிறைந்த கபடதாரி. இன்னும் இவை மக்கள் நம்பினால், பாவம் மக்கள் தான். என்ன பேசுகிறோம் என்றே இவருக்கே தெரியாது. துஷ்டன், தொலைநோக்கு பார்வை இல்லாத ஒரு மூடன்.
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
16-மே-202221:17:24 IST Report Abuse
C.SRIRAM சுத்தமான தற்குறித்தனம் . இந்த நபரிடமிருந்து தினம் ஒரு உளறல் . ஓட்டுக்காக என்ன வேணாலும் செய்வான் போல. ஏதோ இவங்க அப்பன் வீடு சொத்து போல ஓட்டுக்காக இனமாக மின்சாரத்தை வரி விட்டுக்கொண்டிருக்கிறான் . சமூக விரோதி
Rate this:
Cancel
Sekhar Guruswamy - chennai,இந்தியா
16-மே-202220:29:09 IST Report Abuse
Sekhar Guruswamy ஆக்ரமிப்பு எப்படி ஒப்புக்கொண்டால் இவர் என்ன சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி ஏன் கேட்டகக்கூடாது. எந்த விஷயத்தை வைத்து பாலிடிக்ஸ் பண்ணுவது என்று கூட தெரியாதா இந்த பெரிய மனுஷருக்கு. இவர் போல ஆட்கள் நாட்டை கூறு போட்டு விற்று விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X