லும்பினி: இந்தியா - நேபாள நட்புறவு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேபாளம் சென்றார். அங்குள்ள மாயாதேவி கோயிலுக்கு சென்று வழிப்பட்ட அவர், புத்தரின் பிறந்த இடமாக கருதப்படும் லும்பினியில் உள்ள புத்த கலாசார மையத்திற்கு சென்று சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர், நேபாளத்துடன் 6 முக்கிய ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். தொடர்ந்து புத்த துறவிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, நேபாளத்தின் நட்பு வலுப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சூழ்நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்கும்.

புத்த பகவான் மீது நமது இரு நாடுகளின் பக்தியும், நம்பிக்கையும் நம்மை ஒரே இழையில் இணைக்கிறது. அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களாக ஆக்குகிறது. தியாகம் செய்வதன் மூலமே நாம் சிறப்பை அடைய முடியும் என்பதற்கு புத்தர் உதாரணம். புத்தர் தனக்கு கிடைத்த ஞானத்தின் மூலம் மக்களை நல்வழிப்படுத்தினார். நான் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டாம், ஆராய்ந்து உணருங்கள் என புத்தர் கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE