வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் 12 - 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசியின் விலை, ரூ.840ல் இருந்து ரூ.250 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசியும், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின், 'கோவிஷீல்டு' தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன.இதேபோல், 15 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 12 - 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, 'பயாலஜிக்கல் - இ' நிறுவனத்தின், 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசியும் செலுத்தப்படுகின்றன.

'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசிக்கான விலை ஒரு டோஸ் ரூ.840 என 'பயாலஜிக்கல் - இ' நிறுவனம் நிர்ணயித்திருந்தது. வரி, நிர்வாகக் கட்டணங்கள் உட்பட, ஒரு டோஸ் ரூ.990 க்கு கிடைத்தது. இந்நிலையில் அதன் விலையை ரூ.250 ஆக அந்நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. இனி வரியுடன் சேர்த்து ரூ.400க்கு ஒரு டோஸ் 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE