இன்னும் ஒரு நாளைக்கு தான் பெட்ரோல் கையிருப்பு: ரனில் விக்கிரமசிங்கே

Updated : மே 17, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கொழும்பு: 'இலங்கையில் இன்னும் ஒரு நாளைக்கு தான் பெட்ரோல் கையிருப்பு உள்ளது' என அந்நாட்டின் புதிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இலங்கையின் புதிய
Srilanka Economic Crisis, Srilanka, Ranil Wickremesinghe

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: 'இலங்கையில் இன்னும் ஒரு நாளைக்கு தான் பெட்ரோல் கையிருப்பு உள்ளது' என அந்நாட்டின் புதிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராக, ரனில் விக்ரமசிங்கே(73) பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: பிரதமர் பதவி வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடு எதிர்கொண்டுவரும் சவாலான சூழலை பார்த்து, பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி அதிபர் எனக்கு அழைப்பு விடுத்தார். அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும். தற்போதைய பிரச்னைகளை தீர்க்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை அல்லது அரசியல் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை அவசரமாக உள்ளது. தற்காலிக, நிரந்தர திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.


latest tamil newsதினசரி மின்வெட்டு 15 மணி நேரமாக அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது. எரிவாயு மற்றும் மண்ணெண்ணை அவசர தேவையாக உள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் டாலர் கையிருப்பில் தட்டுப்பாடு உள்ளது. இன்னும் ஒரு நாளைக்கு தான் பெட்ரோல் கையிருப்பு நம்மிடம் உள்ளது. நேற்று இலங்கை வந்தடைந்த டீசலால், டீசல் பற்றாக்குறை ஓரளவிற்கு தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
19-மே-202218:29:42 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy மக்களே புரிந்து கொள்ளுங்கள், முன்பகல் செய்தது பிற்பகல் வந்தது செய்தது கொலை வந்தது பற்றாக்குறை வறுமை அல்ல. ஆறுகோடி தமிழ் மக்களில் மூணு கோடி மக்கள் இலங்கை தமிழனுக்கு ஆகா வருந்தி இருப்பார்கள்
Rate this:
Cancel
17-மே-202207:29:44 IST Report Abuse
ந சசிகுமார் பேசாமல் வாக்கெடுப்பு நடத்தி இலங்கையை பாரதத்தோடு இணைத்துவிட்டு அகண்ட பாரதநாட்டின் அங்கமான இலங்கை மாநிலத்தின் முதல்வராகுங்கள் . இலங்கை சுபிட்சமடையும்
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
16-மே-202220:35:33 IST Report Abuse
Ramona என்ன நாடோ,என்ன அரசாங்கமோ. சீனாவை கேட்டால் கிடைக்கும், இந்த செய்தி இந்தியா தானாக முன்வந்து உதவ வேண்டும் என்பதற்காகவேண்டும், அதான் இவரது உள்நோக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X