மம்தாவுக்கு கிடைத்த பாராட்டு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

மம்தாவுக்கு கிடைத்த பாராட்டு!

Added : மே 16, 2022 | கருத்துகள் (1) | |
'எதிரும், புதிருமாக இருந்தவர்கள், இப்படி நட்பு பாராட்டுவது ஆச்சரியமான விஷயம் தான்...' என்கின்றனர், மேற்கு வங்க மாநில அரசியல்வாதிகள்.இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசுடன், மம்தா தொடர்ந்து மோதல் போக்கை பின்பற்றி வருகிறார்; மத்திய அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்; அதற்கு, மேற்கு வங்க மாநில
மம்தாவுக்கு கிடைத்த பாராட்டு!

'எதிரும், புதிருமாக இருந்தவர்கள், இப்படி நட்பு பாராட்டுவது ஆச்சரியமான விஷயம் தான்...' என்கின்றனர், மேற்கு வங்க மாநில அரசியல்வாதிகள்.


இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசுடன், மம்தா தொடர்ந்து மோதல் போக்கை பின்பற்றி வருகிறார்; மத்திய அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்; அதற்கு, மேற்கு வங்க மாநில பா.ஜ.,வினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, சமீபத்தில் மேற்கு வங்கத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அமைச்சர் அமித் ஷாவை விருந்துக்கு அழைத்திருந்தார். அங்கிருந்த உணவுகளில், 'லஸ்சி'யை மிகவும் விரும்பி சாப்பிட்டார், அமித் ஷா. இதை கவனித்த கங்குலி, 'குஜராத் மாநிலத்தவர்களுக்கு, இது ரொம்ப பிடிக்கும் என, மம்தா தான் என்னிடம் கூறினார்...' என்றார். அதைக் கேட்டு அமித் ஷா ஆச்சரியமடைந்தார். 'ரொம்ப நல்லது... மம்தா சொன்னார் என்கிற போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது...' என்று கங்குலியிடம் கூறினார்.

உடனே, மேற்கு வங்க மாநில பா.ஜ.,வினரை அழைத்த அமித் ஷா, 'எதிர்க்கட்சியினருக்கு மரியாதை கொடுப்பதில், மம்தா முன் உதாரணமாக திகழ்கிறார். நீங்களும் அதுபோல செயல்படுங்கள்...' என்றார். 'மம்தாவுக்கு, அமித் ஷாவிடமிருந்து பாராட்டு கிடைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்...' என்றபடியே கலைந்து சென்றனர், பா.ஜ.,வினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X