வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: கோதுமை விளைச்சல் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக சர்வதேச ஏற்றுமதியை இந்தியா முன்னதாகத் தடை செய்து இருந்தது. இதனால் தற்போது சர்வதேச சந்தையில் வரலாறு காணாத விலை ஏற்றம் உண்டாகி உள்ளது.

இந்தியாவின் முன்னதாக கோதுமை உற்பத்தி மற்றும் விநியோக தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து மத்திய அரசு தற்காலிகமாக வெளிநாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இந்த தற்காலிக தடை காரணமாக தற்போது ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துவங்கி தற்போது வரை இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய-உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகள் ரஷ்யா உடனான வர்த்தகத் தொடர்பை துண்டித்து உள்ளன.

இதன்காரணமாக கடந்த இரண்டு மாதமாக ரஷ்யா, இந்திய ஏற்றுமதியை நம்பி உள்ளது. குறிப்பாக ஆடை, உணவு உள்ளிட்ட அன்றாட ஏற்றுமதிகளுக்கு இந்தியா கைகொடுத்தது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு லாபம் ஈட்டி வந்தனர்.
தற்போது கோதுமை விளைச்சல் குறைவு காரணமாக இந்திய சந்தையில் கோதுமையின் விநியோகம் குறைந்தது. இதனால் கோதுமையின் விலை அதிகரித்தது. வட இந்திய மாநிலங்கள் பல, இதன்காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. வரலாறு காணாத அளவில் ரஷ்யாவில் தற்போது ஒரு டன் கோதுமை 453 அமெரிக்க டாலர் விலைக்கு விற்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE