புதுடில்லி: காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மத்திய பாஜ., அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முன்னதாக ராகுல் பட் என்கிற அரசு ஊழியர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கஷ்மிரி பண்டிட் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் அவரை சரமாரியாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

காஷ்மீரின் பட்கேம் மாகாணத்தில் உள்ள சதூரா நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது காஷ்மீரி பண்டிட்டுகள் சமூகத்தினர் இடையே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மத்திய பாஜ., அரசு இச்சம்பவத்தை அடுத்து இதுபோன்ற பண்டிட்களுக்கு எதிரான அச்சுறுத்தலில் இருந்து அவர்களை காக்க ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE