அகர்தலா : திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹாவின் புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. 11 எம்.எல்.ஏ.,க்களுக்கும், கவர்னர் ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் பா.ஜ., கவனம் செலுத்தி வருகிறது.இதன் ஒரு நடவடிக்கையாக, முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப், பா.ஜ., தலைமையின் உத்தரவுக்கு இணங்க கடந்த வாரம் ராஜினாமா செய்தார். பின், பா.ஜ., சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மாணிக் சாஹா, மாநில முதல்வராக நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.இந்நிலையில், மாணிக் சாஹாவின் அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.
அமைச்சர்கள் 11 பேருக்கும், மாநில கவர்னர் ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முன்னாள் முதல்வர் பிப்லப் குமாரின் அமைச்சரவையில் இருந்த மேவர் குமார் ஜமாதியாவை தவிர, மற்ற அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த, 11 பேரில், ஒன்பது பேர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர், ஐ.பி.எப்.டி., எனப்படும் பழங்குடியின மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்கள். அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முன்னாள் முதல்வர் பிப்லப் தேப் பங்கேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE