முதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் தென்னரசு

Updated : மே 17, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (203) | |
Advertisement
சென்னை : 'முதல்வர் ஸ்டாலின் பெயரில் வரும் 'ஸ' என்ற எழுத்தை நீக்கி, அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்க, தமிழக அரசு உடனே ஒரு குழு அமைக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அனைவரும் ஹிந்தி மொழி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பா.ஜ., மூத்த தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில், 'தமிழணங்கு' என்ற தலைப்பில், ஒரு பெண்
Thangam Thennarasu, MK Stalin, Annamalai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'முதல்வர் ஸ்டாலின் பெயரில் வரும் 'ஸ' என்ற எழுத்தை நீக்கி, அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்க, தமிழக அரசு உடனே ஒரு குழு அமைக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அனைவரும் ஹிந்தி மொழி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பா.ஜ., மூத்த தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில், 'தமிழணங்கு' என்ற தலைப்பில், ஒரு பெண் நடனம் ஆடுவது போலவும், கையில் 'ழ' என்ற எழுத்துடன் சூலாயுதம் வைத்திருப்பது போலவும் சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.


latest tamil newsஇந்த படத்திற்கு பதிலடி தரும் வகையில், அம்மன்சிலை போல காட்சி தரும் தமிழ்த் தாய் புகைப்படத்தையும், தமிழ்த் தாயை சுற்றி தமிழ் அகராதியில் உள்ள எழுத்துக்களும் இடம் பெற்ற ஒரு படத்தை, சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த படத்திற்கு பதில் அளித்து, வீண் சர்ச்சையில் சிக்கினார் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. அவர் வெளியிட்ட அறிக்கை, முதல்வர் ஸ்டாலினை வீண் வம்புக்கு இழுத்து விட்டுள்ளது.


latest tamil news


தங்கம்தென்னரசு அறிக்கை: 'தமிழணங்கை போற்றுகிறோம்' என்ற போர்வையில், தமிழ் எழுத்துக்களுடன், 'ஸ'வையும் இணைத்து படம் போடும்போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள், தன் உண்மை முகத்தை காட்டி விட்டது. இதைத்தான் 'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' என, வள்ளுவர் அடையாளம் காட்டினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil newsஇதற்கு பதிலடி தரும் வகையில், அண்ணாமலை அறிக்கை: தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர், நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள 'ஸ' என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். 'தமிழ் தமிழ்' என முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது.


latest tamil news'ஸ' வை நீக்கி, அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்க, தமிழக அரசு உடனே ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயரை எவ்வாறு அழைக்க வேண்டும் என, தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (203)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
18-மே-202215:48:32 IST Report Abuse
sethusubramaniam மாண்புமிகு தமிழக முதலமைச்சர் , அவர்களது முயற்சியால்தான் முன்பு துபாயில், இப்பொழுது வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்துள்ளது. இந்த செய்தியை ஊடகங்கள் மறைத்தது மனதுக்கு வேதனையளிக்கிறது.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
17-மே-202215:04:54 IST Report Abuse
Svs Yaadum oore நாலு நாகர்கோவில் கன்னியாஸ்திரிகள் இங்கிருந்து மக்கள் வரிப்பணத்தில் சென்று இத்தாலியில் அரை குறை தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்களாம். நானூறு வெள்ளைக்காரனையே ஐரோப்பாவில் சிம்பொனி திருவாசகம் பாட வைத்தவர் இசைஞானி .
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18-மே-202210:08:15 IST Report Abuse
Fastrackஅந்த சிம்பனி எங்கே கிடைக்கும் .....
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
20-மே-202210:23:27 IST Report Abuse
Neutralliteசி டி ல கெடைக்கும்...புதருக்குள்ள (புஷ்) தேடுனா கெடைக்காது......
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-மே-202214:20:53 IST Report Abuse
duruvasar கொக்கென நினைத்தாயோ கொங்கனவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X