வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-பழம்பெரும் பாடகி பி.சுசீலாவுக்கு, சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு போஸ்டல் கவர் வெளியிட்டு, மத்திய அரசின் தபால் துறை கவுரவித்துள்ளது.
![]()
|
இதற்கான விழா, சென்னையில் சுசீலாவின் வீட்டில் நடந்தது. வயது முதிர்வின் காரணமாக, சில ஆண்டுகளாக சினிமாவிலும், மேடையிலும் பாடுவதை நிறுத்தியிருந்த சுசீலா, இந்நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று, காலத்தால் அழியாத சில பழைய பாடல்களை பலத்த கரகோஷத்துக்கு இடையே பாடினார்.
ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்த சுசீலா, 'நான் நிறைய பாடியிருக்கேன். ஆனால், கொஞ்சமாத்தான் பேசுவேன். ஆனால், இன்னைக்கு நான் நிறைய பேசுகிறேன்; காரணம், ரொம்ப சந்தோஷமா இருக்கேன்' என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து பேசிய வடபழநி ஆண்டவர் கோவில் தக்காரும், கோவை 'தினமலர்' வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம், 'சுசீலாவின் நகைச்சுவை உணர்வே, அவரது ஆரோக்கியத்துக்கும், இளமைக்கு காரணம்' என்றார். அவர் மேலும் பேசியதாவது:நான் தக்கராக இருக்கும் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு, தரிசனத்திற்கு வாருங்களேன் என்று அழைத்தேன், 'கூட்டமா இருக்குமே... நான் கூட்டமான இடங்களுக்கு செல்வதில்லையே' என்றார்,
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement