ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., குத்தாட்டம்; பீஹாரில் தலைவர்கள் அதிர்ச்சி

Added : மே 16, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பாட்னா : பீஹாரில் திருமண விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., இளம் பெண்ணுடன் மேடையில் குத்தாட்டம் போட்டதுடன், அந்த பெண் மீது பணத்தை வீசி எறிந்த சம்பவம் ஆளுங்கட்சிக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாகல்பூர் எம்.எல்.ஏ.,வும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான கோபால் மண்டல், திருமண
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., குத்தாட்டம்;  பீஹாரில் தலைவர்கள் அதிர்ச்சி


பாட்னா : பீஹாரில் திருமண விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., இளம் பெண்ணுடன் மேடையில் குத்தாட்டம் போட்டதுடன், அந்த பெண் மீது பணத்தை வீசி எறிந்த சம்பவம் ஆளுங்கட்சிக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாகல்பூர் எம்.எல்.ஏ.,வும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான கோபால் மண்டல், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்றார்.

'பிளையிங் கிஸ்'
அங்கு விருந்தினர்களை மகிழ்விக்க நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.எம்.எல்.ஏ., மேடையில் அமர்ந்திருந்தபோது, நடனக்குழுவைச் சேர்ந்த இளம்பெண், சினிமா பாட்டுக்கு நடனம் ஆடினார். திடீரென எழுந்த எம்.எல்.ஏ., அந்த பெண்ணுடன் சேர்ந்து உற்சாகமாக குத்தாட்டம் போட்டார்.

தன் மேல் சட்டையை துாக்கி பிடித்து, இடுப்பை வளைத்து ஆடினார். இது, பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.அடுத்து, உடன் ஆடிய பெண்ணின் கையை பிடித்து ஆடிய எம்.எல்.ஏ., ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு, 'பிளையிங் கிஸ்' அடித்தார். பின், பணக்கட்டை எடுத்து அந்த பெண்ணின் மீது ஒவ்வொரு நோட்டாக வீசினார்.

இந்த குத்தாட்ட, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது. இதைக்கண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ''எம்.எல்.ஏ., கோபால் மண்டல் தன் பதவியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும்,'' என, ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் உமேஷ் குஷ்வஹா எச்சரித்துள்ளார்.

'அண்டர்வேர்'
இவர் இதுபோல நடந்து கொள்வது புதிதல்ல. சில மாதங்களுக்கு முன்னர் ரயிலில், 'அண்டர்வேர்' உடன் பயணித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வயிறு சரியில்லாததால் அப்படி நடந்து கொண்டதாக அதற்கு விளக்கமும் அளித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
17-மே-202211:28:35 IST Report Abuse
jayvee சில தலைவர்கள் நைட் க்ளப்பில் நேரத்தை செலவழிப்பதை போல ..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
17-மே-202208:52:57 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN அங்கே அவர்களுக்குத் தெரிந்த நாகரிகம் இதுதான்... அம்பலத்தில் ஆடும் பெண்ணை அறைக்குள் ஆடவைக்கத்தான் பண வீச்சு... பெண்ணுரிமை இயக்கங்கள் அல்லவா கவலைப்பட வேண்டும் ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X