பெண் வக்கீலை தாக்கியவர் கைது

Added : மே 16, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பாகல்கோட் : பெண் வழக்கறிஞரை அடித்து, உதைத்தவர் கைது செய்யப்பட்டார்.பாகல்கோட் விநாயகா நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கீதா சிக்கேரி, 40. மே 14ல் இவரும், இவரது கணவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகாந்தேஷ், 45, நடுரோட்டில் அவர்களை தடுத்து நிறுத்தி, சரமாரியாக அடித்து உதைத்தார். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை
பெண் வக்கீலை தாக்கியவர் கைது

பாகல்கோட் : பெண் வழக்கறிஞரை அடித்து, உதைத்தவர் கைது செய்யப்பட்டார்.

பாகல்கோட் விநாயகா நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கீதா சிக்கேரி, 40. மே 14ல் இவரும், இவரது கணவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகாந்தேஷ், 45, நடுரோட்டில் அவர்களை தடுத்து நிறுத்தி, சரமாரியாக அடித்து உதைத்தார். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது.

போலீசார் விசாரித்து, மகாந்தேஷை நேற்று கைது செய்தனர். இவர், பாகல்கோட் பல்கலைக்கழகத்தில் போட்டோ கிராபராக பணியாற்றி வருகிறார். பெண் வழக்கறிஞரை தாக்கியவருக்கு ஆதரவாக யாரும் வாதிடப் போவதில்லை என மற்ற வழக்கறிஞர்கள் முடிவெடுத்து உள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
17-மே-202208:55:13 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "பெண் வழக்கறிஞரை தாக்கியவருக்கு ஆதரவாக யாரும் வாதிடப் போவதில்லை என மற்ற வழக்கறிஞர்கள் முடிவெடுத்து உள்ளனர்." குற்றவாளிக்கு ஆஜராவது எங்கள் தொழில் தர்மம் என்று இவர்களது வாய்கள் வேறு விதமாகப் பேசும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X