சென்னையில் 27,500 குடியிருப்புகள் வாழ தகுதியற்றவை!

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-''சென்னையில் மட்டும், 27 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் வாழ தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை மறு கட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். சென்னையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய, சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில், மறு கட்டுமானம் செய்யப்பட உள்ள

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-''சென்னையில் மட்டும், 27 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் வாழ தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை மறு கட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.



latest tamil news



சென்னையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய, சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில், மறு கட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில் வசிக்கும், 256 குடியிருப்புதாரர்களுக்கு, கருணைத் தொகையாக, 61.44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.அப்போது, அவர் பேசியதாவது:இந்த திட்டப்பகுதி கட்டப்பட்டு, 48 ஆண்டுகளாகிறது.

குடியிருப்புதாரர்களுக்கு, ஒரு வீடு 415 சதுர அடி பரப்பளவில், 300 வீடுகள் 40.13 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய, புதிய அடுக்குமாடி குடியிருப்பு, 15 மாதங்களில் கட்டித்தரப்படும்.சென்னையில், 20 ஆண்டுகள் கடந்த அனைத்து திட்டப்பகுதிகளின் குடியிருப்புகளை ஆய்வு செய்து, அறிக்கை பெறப்பட்டது. சென்னையில் மட்டும், 27 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளது கண்டறியப்பட்டது.


latest tamil news



இரண்டு ஆண்டுகளில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 15 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், மறு கட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், எம்.பி., தயாநிதிமாறன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
17-மே-202211:15:33 IST Report Abuse
jayvee எனக்கு தெரிந்து திராவிடர்கள் கட்டிய கட்டிடங்களில் இன்றளவும் நிலைத்து நிற்பது அறிஞர் அண்ணா காலத்தில் கட்டப்பட்ட ஹௌசிங் போர்டு MIG பிளட்ஸ் ..இவைகள் அடையாறில் உள்ளது..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மே-202209:36:02 IST Report Abuse
Kasimani Baskaran கல்லணை வரலாற்றை தாண்டி நிற்கிறது. ஆனால் திராவிட மடத்தினர் கட்டிய கட்டிடங்கள் அரை நூற்றாண்டில் பல்லிளித்து விடுகிறது.
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202207:56:11 IST Report Abuse
Jai அரசு இலவசமாக இடம் மற்றும் வீடு கொடுக்கிறது. வாங்கி உள்ளவர்கள் இந்த கட்டிடத்திற்கான பராமரிப்புகளை செய்து கட்டிடங்களின் சிற தன்மை பாதுகாக்க வேண்டும். இன்று நகர்ப்புறத்தில் வீடு வாங்கும் சராசரியாக வேலைசெய்யும் நடுத்தர வர்க்கத்தினர் இருபது வருடங்கள் லோன் கட்டுகின்றனர் மற்றும் மாதம் மாதம் பராமரிப்புக்கு பணம் கொடுக்கின்றனர். இலவசமாக வீடு வாங்குபவர்கள் பராமரிப்பு கூட எதுவும் கொடுக்காதது சரியாக இல்லை மற்றும் அரசு ஒதுக்கீட்டு வீடுகளில் குற்றம் புரிந்தவர் வசிக்கவும் அனுமதிக்கக் கூடாது. இலவசமாக வீடுகளையும் வாங்கி அங்கு குற்றவாளிகள் தங்க அனுமதிக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X