அரசாங்க சொத்து; கலெக்டர் கெத்து| Dinamalar

அரசாங்க சொத்து; கலெக்டர் 'கெத்து'

Added : மே 16, 2022 | |
தெப்போற்சவம் விழா பார்க்க, அவிநாசி கோவிலுக்கு சித்ராவும், மித்ராவும் புறப்பட்டனர். வெயில் கொளுத்தியதில், வழியில் தென்பட்ட ஜூஸ் கடைக்குள் புகுந்து, ஆர்டர் செய்தனர்.''அப்பப்பா என்ன வெயில்...'' என, வியர்வையை துடைத்த சித்ரா, ''கோடை வெயில் கொளுத்துற அளவுக்கு, சூரிய கட்சிக்குள்ள உட்கட்சி பூசலும் அனல் பறக்குதாம்,'' என ஆரம்பித்தாள்.''கட்சிக்குள்ள கிளை நிர்வாகிகள்
அரசாங்க சொத்து; கலெக்டர் 'கெத்து'

தெப்போற்சவம் விழா பார்க்க, அவிநாசி கோவிலுக்கு சித்ராவும், மித்ராவும் புறப்பட்டனர். வெயில் கொளுத்தியதில், வழியில் தென்பட்ட ஜூஸ் கடைக்குள் புகுந்து, ஆர்டர் செய்தனர்.

''அப்பப்பா என்ன வெயில்...'' என, வியர்வையை துடைத்த சித்ரா, ''கோடை வெயில் கொளுத்துற அளவுக்கு, சூரிய கட்சிக்குள்ள உட்கட்சி பூசலும் அனல் பறக்குதாம்,'' என ஆரம்பித்தாள்.''கட்சிக்குள்ள கிளை நிர்வாகிகள் எலக்ஷனை சுமூகமா முடிச்சிட்டாங்க. பெரும்பாலும் பழைய ஆட்களுக்கு திரும்பவும் வாய்ப்பு கொடுத்துட்டாங்க. ஆனா, நகர செயலாளர் பதவியை பிடிக்க, நிறைய இடங்கள்ல கடும் போட்டியாம்,''''குறிப்பா, பலமுனை போட்டியாம். 'பெட்டி வைக்காம தேர்தல் நடத்தணும்'ன்னு கட்சித்தலைமை சொல்லிட்டதால, கிளை நிர்வாகிகள 'சரிக்கட்ட' தயாரா இருந்தாங்களாம். ஆனா, மாவட்ட ஆபீஸ்ல 'மிட் நைட்' வரைக்கும் பஞ்சாயத்து பேசி, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறதா சொல்றாங்க'' என்றாள்.''எலக்ஷன் டைம்ல, ஓட்டுக்கு தான் பணம் கொடுப்பாங்கன்னு பார்த்தா, பதவியை வாங்கக்கூட படியளக்க வேண்டிய நிலைமைக்கு, உடன்பிறப்புகள் வந்துட்டாங்களே,'' 'உச்' கொட்டினாள் மித்ரா.''ஆனா, தாராபுரத்துல நிலைமை வேற மாதிரி. இப்ப இருக்கற நிர்வாகியை துாக்கிட்டு, தன்னோட ஆதரவாளரை நியமிக்க, சேதி சொல்ற மினிஸ்டர் காய் நகர்த்துறாராம். இதனால, அந்த நிர்வாகியோட ஆதரவாளருங்க 'அப்செட்' ஆகி, மினிஸ்டர் மேல, தலைமைக்கு புகார் பண்ற அளவுக்கு போயிட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.

நகை போச்சே...
''அந்த ஊரை பத்தி நீங்க சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வருதுக்கா. அங்க தடையை மீறி, செம்மண் எடுக்றாங்களாம். கடத்தறது யாருன்னு தெரிஞ்சும், ஆபீசர்ங்க 'சைலன்ட்டில்' இருக்காங்களாம். மீறி கேட்டா, கண்டுக்காம விடுங்கன்னு, புதுக்கோட்டையில் இருந்து போன்கால் வருதாம்,'' என விஷயத்தை சொன்னாள் மித்ரா.சாலையில் கடந்த போன போலீஸ் ஜீப்பில் இருந்த 'மைக்'கில், ''திருவிழா கூட்டத்தில், பக்தர்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்'' என ஒலித்தது.''அக்கா... தேர் கூட்டத்துல நகை தொலைஞ்சு போறது, எதிர்பாராம நடக்கற விஷயம் தான். ஆனா, திருப்பூர் ஜி.எச்.,சில், நர்ஸ் ஓய்வறையில இருந்த நகையையே, யாரோ 'அபேஸ்' பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''அப்படியா!'' என, சித்ரா அதிர்ச்சியடைய, ''செவிலியர் தினத்தன்னைக்கு சில நர்ஸ்கள், நகை, போட்டு வந்திருக்காங்க. டியூட்டி டைமில், அத ரூம்ல வைச்சுட்டு, ஆபரேஷன் தியேட்டருக்கு போய்ட்டு, திரும்ப வந்து பார்க்றப்போ, வளையல், செயின்னு, நான்கு பவுன் நகையை காணலையாம்,''''போலீஸ் வரைக்கும் விவகாரம் போக, ஹாஸ்பிடலில், ரெண்டு மாசாம சிசிடிவி., கேமரா வேல செய்றது இல்ல. ரூமுக்குள்ள யாரு வந்தாங்க, போனாங்கன்னு, எப்படி கண்டுபிடிக்கிறது? நகை கிடைக்கும்னு, உறுதியா சொல்ல முடியாது'ன்னு சொல்லிட்டாங்களாம். நகையை பறி கொடுத்த நர்ஸ்கள் அழுது புலம்பியிருக்காங்க,'' என, மொத்த விஷயத்தையும் சொன்னாள் மித்ரா.

அதிகாரி 'வெல...வெல'
''பெரிய அதிகாரி என்ன பண்ண போறார்ன்னு பார்க்கலாம்'' என்ற சித்ரா, ''மெடிக்கல் காலேஜ் கட்டுமான பணியை பார்க்க, 'ஹெல்த் செக்கரட்டரி' போனாரு. பொதுப்பணித்துறை அதிகாரிங்க, 20 மீட்டர் நீளத்துக்கு ஒரு வரைபடத்தை விரிச்சு, அங்க நடந்துக்கிட்டு இருக்கற கட்டட வேலையை, 'ஸ்கெட்ச்' போட்டு காண்பிச்சு, ஒப்பிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்,''''உடனே, டென்ஷனான செக்கரட்டரி, 'நீங்க என்ன வேல செய்றீங்கன்னு பார்க்க தான் நேர்ல வந்திருக்கேன்; பார்த்து தெரிஞ்சுக்கறேன்'ன்னு சொல்லி, ஒவ்வொரு தளத்துக்கும் போய் பார்த்துட்டு வந்திருக்காரு. அதிகாரிங்க வெலவெலத்து போய்ட்டாங்களாம்,''ரெண்டு டம்ளரில் ஜூஸ் வர, இருவரும் அருந்தினர்.''அக்கா போன வாரம் அரிசிக்கடை பக்கம் போயிருந்தேன். அங்க இருக்க கலாசுக்காரங்க எல்லாம், சி.ஐ.டி.யு., சங்கத்துல இருந்து, ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்துக்கு மாறிட்டாங்களாம். என்ன காரணம்ன்னு விசாரிச்சதில், கலாசுக்காரங்க கூலி அதிகமா கேட்டிருக்காங்க,''''அரிசிக்கடை ஓனர்ஸ், 'அப்படியெல்லாம் தர முடியாது; ஆட்டோக்காரங்க மூலமா, நாங்களே அரிசி மூட்டைகளை இறக்கிக்கிறோம்ன்னு சொல்ல, கலாசு தொழிலாளிங்க ஒத்துக்கலையாம். இதுல ஏதோ பிரச்னை வந்ததால, கலாசு தொழிலாளிகளை எம்.பி.,க்கிட்ட பேச வைச்சு, சங்கத்துல இணைச்சு அரிசி கடை வீதியில, கொடி நட்டிட்டாங்க,'' என்றாள் சித்ரா.

கலெக்டர் 'நச்'
''எப்படியோ சங்கத்தை உடைச்சிட்டாங்கன்னு சொல்லு. எம்.பி.,ன்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது. கலெக்டர் ஆபீஸ்ல நடந்த, 'திஷா' கமிட்டி மீட்டிங்ல, 'ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததால, எம்.பி., தொகுதி நிதியில இருந்து, பணம் ஒதுக்கணும்ன்னு, ஒன்னாவது மண்டல தலைவரு கேட்டிருக்காரு. ''எனக்கே ரெண்டு வருஷமா நிதி வரல; இனிமே தொகுதி நிதியே வராதுன்னு நினைக்கறேன்,'னு, சொல்லி நழுவிட்டாராம் நம்ம எம்.பி.,''ஈரோடு எம்.பி., பேசறப்போ, ''இப்பெல்லாம் நிதியும் வர்றது இல்ல; வேலையும் நடக்கறது இல்ல. ஆனா, மூனு வருஷத்துக்கு முன்னாடி ஒதுக்குன என்னோட நிதியில, காங்கயம் ஒன்றியத்துல, ரோடு போடறாங்க. அந்த வேலைய, தாசில்தார் தடுத்து நிறுத்திட்டாரு. இது, எந்த வகையில நியாயம்,'னு ஆவேசமா கேட்டிருக்காரு,''''அந்த ரோடு, நீர்நிலையை ஆக்கிரமிச்சு போட்டிருக்காங்க; அதனாலதான் தாசில்தார் வேலையை நிறுத்தியிருக்காரு; அரசாங்க சொத்து காப்பாத்த அவர் செஞ்சது கரெக்ட் தான்,'னு, 'பட்'ன்னு பதில் சொல்லிட்டாராம் கலெக்டரு. உடனே, எம்.பி., அடுத்த 'டாபிக்' பேசினாராம்,''ஆப்பிள் ஜூஸ்க்கு, பணம் கொடுத்து விட்டு, இருவரும் புறப்பட்டனர்.

எப்படி இருக்குமோ?
''அக்கா…உங்களோட ப்ரெண்ட், ஓ.ஏ., வேலைக்கு 'ட்ரை' பண்றதா சொன்னீங்கள்ல; என்ன ஆச்சு?'' என கேட்டாள் மித்ரா.''இது சம்பந்தமா விசாரிக்க தான், போன வாரம் கலெக்டர் ஆபீஸ் போனேன் மித்து. இதுவரை, அஞ்சாயிரம் பேர் அப்ளிகேஷன் போட்டிருக்காங்க. அங்க சுத்திகிட்டு இருந்த ஒரு கரைவேட்டிக்காரரு, ''ரெவின்யூ மினிஸ்டர் எனக்கு 'ரிலேஷன்' தான்; ஏழு லட்சம் கொடுத்தா, வேலை வாங்கிடலாம்; ரெண்டு லட்சம் மட்டும் 'அட்வான்ஸ்' கொடுத்தா போதும்; மீதி, 'போஸ்டிங்' வாங்கினதுக்கு அப்புறம் கொடுத்தா போதும்ன்னு, அங்க வேல செய்ற ஒருத்தர்கிட்ட சொல்லிட்டு இருந்தாரு,''''இந்த காட்சியை 'சிசிடிவி'யில கலெக்டர் பார்த்துட்டு இருக்காரு. ஒழுங்கா ஓடிப்போயிடுன்னு'', அந்த இளைஞர் மிரட்ட, இடத்தை காலி பண்ணிட்டாரு கரைவேட்டி. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சியோட கரைவேட்டியை கட்டிக்கிட்டு, இந்த மாதிரி வசூல் பண்றது தான், அவரோட வேலைன்னு, அங்க இருக்கறவங்க சொன்னாங்க,''''சங்கங்களை பதிவு செய்ற ஆபீஸ், நெருப்பெரிச்சல்ல இருக்கு. அங்க வேல செய்ற ஒரு 'கிளார்க்' சரியான நேரத்துக்கு, ஆபீஸ்க்கு வர்றது இல்லையாம். புதுசா விண்ணப்பிக்க வர்றவங்க, இருக்கிற சங்கங்கள புதுப்பிக்க வர்றவங்களை அலைய விடறாராம். வேலையை சீக்கிரமா செஞ்சு கொடுக்கிறதே இல்லையாம்,'' என்றாள் மித்ரா.''வைட்டமின், 'ப' எதிர்பார்ப்பாரோ என்னமோ... எதுக்கும் பக்கத்து வீட்டிலுள்ள 'மகேஷ்' கிட்ட கேட்டா விஷயம் தெரியும்'' என்ற சித்ரா, காற்றில் பறந்த புழுதியை உதறியபடி, ''சர்வீஸ் ரோட்ல எங்க பார்த்தாலும் குப்பைதான். நம்ம கார்ப்பரேஷனுக்கு சொந்தமான, குப்பை அள்ற பேட்டரி வாகனம் பல்லடம் பக்கத்துல, அனாமத்தா கிடந்துச்சாம்,''''இந்த தகவல் ஆபீசர்ஸ் காதுக்கு போனதும், சத்தமில்லாம வண்டியை கொண்டு வந்து சேர்த்துட்டாங்களாம். அந்த வண்டி, எப்படி அங்க போச்சுன்னு விசாரிச்சுட்டு இருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.

'கப்...சிப்...'
''பஞ்சு விலையை கட்டுப்படுத்தணும்னு, உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்க மட்டுமில்லாம, நிட்டிங், டையிங், பிரின்டிங்ன்னு சார்பு கம்பெனிகாரங்களும், போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. ஆனா, பஞ்சை முக்கிய மூலப்பொருளா வைச்சு தொழில் பண்ற நுாற்பாலைக்காரங்க மட்டும் எந்தவொரு சலனமும் இல்லாம, போராட்டத்துக்கு ஆதரவும் தராம இருக்காங்களாம்,''''நுால் விலை ஏறினா என்ன; இறங்கினா என்ன... எப்படியும் வாங்கத்தானே செய்வாங்கங்ற நம்பிக்கைல, அவங்க இருக்காங்களாம். பஞ்சு விலையேற்றத்தால, அவங்களுக்கு நஷ்டம் இல்ல; லாபம் வேணும்னா குறைஞ்சிருக்கலாம். அதனால தான் நடக்கிறத அமைதியா வேடிக்கை பார்க்கிறாங்கன்னு, பனியன் இண்ட்ஸ்ட்ரில ஒரு பேச்சு ஓடுது...'' மித்ரா சொன்னதும், ''ஓ.கே., மித்து. நீ, இங்கயே நில்லு. வண்டிய பார்க் பண்ணிட்டு வர்றேன்,'' என சித்ரா கிளம்பினாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X