தமிழக போக்குவரத்துத் துறையின் நஷ்டம் ரூ.48,500 கோடி!: பஸ் கட்டணம் உயராது என்கிறார் அமைச்சர்

Updated : மே 18, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
''தமிழக அரசின் போக்குவரத்து துறை, 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இருப்பினும் பஸ் கட்டணம் உயராது,'' என, தமிழக போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்ந்து வருவதால், நஷ்டமும் அதிகரித்தபடி உள்ளது. எனவே, விரைவில் பஸ் கட்டணம் உயர்த்துவதற்கான
tnstc, busfare, hike, no, தமிழக போக்குவரத்துத் துறை, நஷ்டம், ரூ 48,500 கோடி, பஸ் கட்டணம், உயர்வு

''தமிழக அரசின் போக்குவரத்து துறை, 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இருப்பினும் பஸ் கட்டணம் உயராது,'' என, தமிழக போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்ந்து வருவதால், நஷ்டமும் அதிகரித்தபடி உள்ளது. எனவே, விரைவில் பஸ் கட்டணம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு துவக்கியதாக தகவல் பரவி வருகிறது.இதை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மறுத்துள்ளார்.

நேற்று, அரியலுாரில் இருந்து வேப்பூருக்கும், அகரம் சீகூரிலிருந்து குன்னத்திற்கும், புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை துவக்கி வைத்தார்.அதன்பின் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசின் போக்குவரத்து துறை, 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டத்திலும், கடுமையான நிதி நெருக்கடியிலும் இயங்கி வருகிறது. மனித சமுதாயத்தின் முன்னேற்றமே, நகர்வை நோக்கியதாகத் தான் உள்ளது. நகர்வை நோக்கிய பயணத்திற்கு, பொதுப் போக்குவரத்து இன்றியமையாதது. மத்திய அரசு, தினமும் டீசல் விலையை உயர்த்தி வரும் நிலையில், மக்களுக்கான சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லாதவாறு, போக்குவரத்துத் துறை இயங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அண்டை மாநிலங்களில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், அங்கு செல்லும்போது, தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களிலும், அங்கு நிர்ணயித்துள்ள தொகையை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. தமிழகத்தில், போக்கு வரத்துக் கட்டணத்தை உயர்த்த, முதல்வர் எந்தவிதமான அறிவுரையும் வழங்கவில்லை. எனவே, பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.

டவுன் பஸ்களில், மகளிருக்கான இலவசப் பயண திட்டத்தில், இதுவரை 112 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் இலவச பயணத் திட்டத்திற்கான செலவுத் தொகை, 1,600 கோடி ரூபாயை, அரசு சார்பில், முதல்வர் வழங்கி உள்ளார்.அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள மிகவும் பழமையான பஸ்களை மாற்ற, 2,000 டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்கள் வாங்க, ஜெர்மன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஏழு மாதங்களுக்குள், அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிவசங்கரன் கூறினார்

வெளிமாநில பஸ்களுக்கு மட்டும் கட்டண உயர்வு?

அமைச்சர் பேட்டி அளித்த பிறகும், பஸ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, போலியான கட்டண உயர்வு பட்டியல், சமூக வலைதளங்களில் வெளியானது.அதைத் தொடர்ந்து, அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை:அரசு பஸ்கள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. இதுகுறித்து என்னிடம் கேட்டபோது, 'அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை' என்று தெரிவித்து விட்டேன்.இரு மாநிலங்களுக்கு இடையே, பஸ் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் போடும்போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும், மற்ற மாநில பஸ்களின் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படித்தான், 'பர்மிட்' வழங்கப்படும். கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, தமிழகத்தில் இயங்கும் அனைத்து பஸ்களுக்கும், கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது . கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துக் கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு, போக்குவரத்துக் கழகம் நிதி நெருக்கடியில் உள்ளது. எனினும், முதல்வர் ஏழை மக்களுக்கு உதவும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகம் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். ஏழை மக்களை பாதிக்காத வகையில், கட்டண உயர்வின்றி அரசு பஸ்கள் இயங்கி வரும்சூழலில், 'கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது' என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
17-மே-202222:08:15 IST Report Abuse
Mohan ஓரு பஸ்சுல டிக்கெட் பரிசோதனை செய்ய 6ஆபீசர், அவங்களுக்கு ஒரு ஜீப்பு.சம்பளம்,பேட்டா,போனசு. இதுவே தனியார் துறையில் 6பஸ்சுக்கும் ஒரே டிக்கெட் பரிசோதகர்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-மே-202221:59:31 IST Report Abuse
sankaseshan ஒன்று மட்டும் புரியவில்லைஎப்போதெல்லாம் திருடர்கள்ஆட்சிக்கு வருமிறார்களோ அப்போதெல்லாம்மின்வெட்டு விலையேற்றம் அடிதடி அராஜகம் குத்து வெட்டுகொலை கொள்ளை எல்லாம் கைகோர்த்து கொண்டு வருகிறது.
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
17-மே-202220:36:33 IST Report Abuse
K. V. Ramani Rockfort முதல்வருக்கு நன்றி சொல்லும் இதே நேரத்தில், போக்குவரத்து துறையில் சிக்கனத்தை கடைபிடித்தால், நஷ்டம் வராது. தரமற்ற உதிரிபாகங்கள் அதற்கும் கமிஷன் வாங்கும் அவலங்கள் இதையெல்லாம் குறைத்தால் ஒரளவு சமாளிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X