புதுக்கோட்டை : புதுக்கோட்டையில், கஞ்சா வைத்திருந்த எஸ்.ஐ., மகன் உட்பட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1.25 கிலோ கஞ்சா மற்றும் பைக், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம், குன்னம்வயல் பகுதியில் திருக்கோகர்ணம் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி, சோதனை செய்தனர்.
அப்போது, டேங்க் கவரில் 20க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. தொடர்ந்து, பைக்கில் வந்த இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் பிரிதிவிராஜ், 26, குன்னவயல் பகுதி மதி, 32, துாத்துக்குடியைச் சேர்ந்த கியாபோஸ், 23, ஆகியோரை திருக்கோகர்ணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.இதில், கியாபோஸ் என்பவர் போலீஸ் எஸ்.ஐ., குமாரவேல் என்பவரின் மகன் என்பதும், திருச்சியில் தனியார் கல்லுாரியில் படித்து வருவதும் தெரிந்தது.அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா வினியோகம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, 20, மணப்பாறையைச் சேர்ந்த அன்புச்செழியன், 19, ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் இருந்து, மொத்தம் 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பைக் மற்றும் நான்கு மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.திருக்கோகர்ணம் போலீசார், ஐந்து பேரையும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE